உணவு டெலிவரி செய்த முதியவருக்காக ரூ.18.4 லட்சம் நிதி திரட்டி அள்ளி வழங்கிய மக்கள்!

உணவு டெலிவரி செய்த முதியவருக்காக ரூ.18.4 லட்சம் நிதி திரட்டி அள்ளி வழங்கிய மக்கள்!

உணவு டெலிவரி செய்த முதியவருக்காக ரூ.18.4 லட்சம் நிதி திரட்டி அள்ளி வழங்கிய மக்கள்!


அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், உணவு டெலிவரி செய்ய வந்த முதியவர் ஒருவரின் கஷ்டத்தைக் கண்டு மனம் வருந்திய பெண் ஒருவர், சமூக வலைத்தளம்மூலம் நிதி திரட்டி அவருக்கு ரூ.18.4 லட்சம் கொடுத்து "வாழ்க்கையையே மாற்றி" அமைத்துள்ளார். இந்த மனதை நெகிழ வைக்கும் சம்பவம், மக்கள் மத்தியில் "பெரும் வரவேற்பை" பெற்றுள்ளது.

ஃப்ளோரிடாவைச் சேர்ந்த அலி அயர்லாந்து என்ற பெண், தனது வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய வந்த ஒரு முதியவர்குறித்த வருத்தத்துடன் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். வயோதிகத்திலும் வாழ்வாதாரத்திற்காக அவர் படும் கஷ்டத்தைக் குறிப்பிட்டு, அவருக்கு உதவ வேண்டுமென அவர் எண்ணியுள்ளார். அந்தப் பதிவின் கீழ் வந்த ஒரு கருத்தை அடுத்து, அவருக்கு நிதி திரட்ட ஒரு ஃபண்ட்ரைசர் (fundraiser) தொடங்கலாம் என்ற யோசனை அலி அயர்லாந்துக்கு வந்தது.

அதன்படி, அவர் தொடங்கிய நிதி திரட்டும் முயற்சிக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு" கிடைத்தது. குறுகிய காலத்திலேயே $21,000 (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.18.4 லட்சம்) நிதி திரட்டப்பட்டது. பிறகு, அந்த முதியவர்குறித்து விசாரித்து, அவரைத் தொடர்புகொண்டு ஒட்டுமொத்த பணத்தையும் கொடுத்து உதவியுள்ளார் அலி அயர்லாந்து. 

இந்த எதிர்பாராத உதவியால் நெகிழ்ந்துபோன முதியவர், கண்கலங்கி அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அலி அயர்லாந்தின் இந்த முயற்சி, சமூக வலைத்தளங்கள்மூலம் எத்தனையோ நல்ல காரியங்களைச் செய்ய முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks