சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை! - 75 வயது டாக்டர் அதிரடி கைது!
கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! - ஓய்வு பெற்ற மருத்துவரின் கொடூரச் செயல்; இளம் பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை!
கோட்டயம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் முரிக்கம்புழா பகுதியில் உள்ள கிளினிக்கில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஓய்வு பெற்ற அரசு டாக்டர் ராகவன் (75) என்பவரை அதிரடியாகப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவரான ராகவன், தனக்குச் சொந்தமான கிளினிக் ஒன்றை வைத்துச் சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில், நேற்று 23 வயது இளம்பெண் ஒருவர், சிகிச்சைக்காக அவரது கிளினிக்கிற்குச் சென்றுள்ளார். அப்போது, சிகிச்சை அளிப்பதாகக் கூறி டாக்டர் ராகவன் அந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் தீவிரத்தன்மையை உணர்ந்த போலீசார், உடனடியாக வழக்குப்பதிவு செய்து, பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் ராகவனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் மருத்துவத் துறை மீது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.