இந்திய இறக்குமதிகள் மீது 50% வரி! - ட்ரம்பின் 'பரஸ்பர வரி' கொள்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

இந்திய இறக்குமதிகள் மீது 50% வரி! - ட்ரம்பின் 'பரஸ்பர வரி' கொள்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

இந்திய இறக்குமதிகள் மீது 50% வரி! - ட்ரம்பின் 'பரஸ்பர வரி' கொள்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது அரசின் வரி விதிப்புக் கொள்கைகளை நீதிமன்றம் மாற்றியமைத்தால், 1929-ஆம் ஆண்டில் ஏற்பட்டதைப் போன்ற "பெருமந்தநிலை" (Great Depression) மீண்டும் ஏற்படும் எனக் "கடும் எச்சரிக்கை" விடுத்துள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தற்போது தனது வரி விதிப்புக் கொள்கைகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகுறித்து "ஆவேசமாக"ப் பேசியுள்ளார்.

"நாங்கள் விதித்துள்ள பரஸ்பர வரிகள்மூலம் அமெரிக்காவின் பொருளாதாரம் வரலாறு காணாத வளர்ச்சியை அடைந்து வருகிறது. நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் நாட்டின் கருவூலத்திற்குள் வந்துகொண்டிருக்கின்றன. ஒருவேளை, 'தீவிர இடது சாரி நீதிமன்றம்' இந்த வரி விதிப்புக்கு எதிராகத் தீர்ப்பளித்தால், அது அமெரிக்கப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். அது 1929-ஐப் போன்ற ஒரு 'பெருமந்தநிலை'யாக இருக்கும்!" என டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு, 1977-ஆம் ஆண்டின் சர்வதேச அவசரக்காலப் பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி டிரம்ப் விதித்த வரிகளின் சட்டபூர்வமான தன்மையை ஆராய்ந்து வருகிறது. இந்த வரிகள், இந்தியா, சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகள்மீது விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் இறக்குமதிகள் மீது அவர் விதித்துள்ள 50% வரி, சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு டிரம்பின் வர்த்தகக் கொள்கையின் எதிர்காலத்தை மட்டுமின்றி, அமெரிக்கப் பொருளாதாரத்தையும் "பெரிதும் பாதிக்கும்" எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.


புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks