ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. சிசிடிவியில் சிக்கிய காமுகன்!

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்.. சிசிடிவியில் சிக்கிய காமுகன்!


ஸ்ரீபெரும்புதூரில் 5 வயது சிறுவன் ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த நிலையில் அசாமை சேர்ந்த வாலிபர் ஒருவர் சிறுவனை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கருமாங்கழனி கிராமத்தில் பீகாரை சேர்ந்த பீகாரைச் சேர்ந்த நீரஜ் குமார், காஜல் குமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 5 வயது சிறுவன் ஆரவ்குமார் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி காணாமல் போனதாக சிறுவனின் தாய் காஜல் குமாரி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

புகார் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கடந்த 12 ஆம் தேதி வழக்கு பதிவு செய்து, சிறுவன் ஆரவ் குமாரை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் சிறுவன் அதே கிராமத்தில் அடர்ந்த முட்புதரில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆரம்பத்தில், சிறுவனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் சிறுவன் தவறி விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்து விட்டதாக சந்தேகித்துள்ளனர். இருப்பினும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது தான் சிறுவன் மரணத்தில் மர்மம் இருப்பது தெரியவந்துள்ளது. 

தொடர்ந்து, அப்பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பின் முன்பு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுவனை இளைஞர் ஒருவர் அழைத்து சென்றது பதிவாகி இருந்தது.

சிசிடிவி காட்சியின் அடிப்படையில், விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் அந்த இளைஞரை அடையாளம் கண்டனர். அவர் அசாம்மைச் சேர்ந்த 22 வயதான போல்தேவ் என்பது தெரியவந்தது. சந்தேகத்தின் அடிப்படையில், போலீசார் போல்தேவை கைது செய்து விசாரணையை தொடங்கினர். போலீஸ் விசாரணையில் போல்தேவ் சிறுவனை ஓரினசேர்க்கைக்கு அழைத்ததாகவும், அதற்கு சிறுவன் மறுத்ததால், அவனை அடர்ந்த முட்புதருக்குள் அழைத்து சென்று கல்லால் அடித்துக் கொன்று, அதன் பின் அவனது உடலை முட்புதரில் வீசியதாக போலீசாரின் தீவிர விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவலை போல்தேவ் தெரிவித்துள்ளான்.  

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை கொலை செய்து, அதனை மறைத்த குற்றத்திற்காக போல்தேவ் மீது, வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

5 வயது சிறுவன் ஓரினச்சேர்க்கை அழைத்தது மட்டுமில்லாமல், அவன் மறுத்தற்காக சிறுவன் என்றும் பாராமல், அவனை கல்லால் அடித்து கொலை செய்து, முட்புதரில் வீசிவிட்டு சாவகாசமாக எதுவும் தெரியாதது போல் நடமாடிய குற்றவாளி போல்பாலுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் சிறுவனின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com