பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் அத்துமீறல்கள்: சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக மாறும் ஆச்சிபட்டி - பொள்ளாச்சி சாலை! Pollachi Highway Vice: Acheepatti-Pollachi Road Becomes Hub of Anti-Social Activities!

பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடரும் அத்துமீறல்கள்: சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக மாறும் ஆச்சிபட்டி - பொள்ளாச்சி சாலை!


பொள்ளாச்சி: கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், குறிப்பாக ஆச்சிபட்டி முதல் பொள்ளாச்சி பேருந்து நிலையம் வரையிலான ஆள நடமாட்டம் இல்லாத பகுதிகளில், வெளிப்படையாக நடைபெறும் பாலியல் தொழில் சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பகுதிகளில் சாலையோரங்களில் சட்டவிரோத பாலியல் தொழில் நடைபெறுவதாகவும், இது கடத்தல், வழிப்பறி போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களுக்கும் வழிவகுப்பதாகவும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. பெரும்பாலும் ஆளரவமற்ற, மறைவான பகுதிகளை தேர்ந்தெடுத்து இச்செயல்கள் அரங்கேற்றப்படுவதால், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

காவல்துறையினர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் இந்த அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். குற்றச் சம்பவங்கள் நடப்பதற்கு முன் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இந்த சமூக விரோதச் செயல்களைக் கண்டறிந்து வேரோடு களையெடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!