இந்திய மக்கள் தினமும் பயன்படுத்தி வரும் UPI பேமெண்ட் மீதான கட்டணத்தை விதிக்கும் முறை தீபாவளி பண்டிகை முடிந்த பின்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த இந்திய வர்த்தகர்களும் இதுதொடர்பான அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

NPI அமைப்பு UPI சேவை தற்போது இலவசமாக இருக்கும் வேளையில் இச்சேவைக்கு அக்டோபர் 15ஆம் தேதி முதல் 2000 ரூபாய்க்கு அதிகமாக நடைபெறும் பண பரிமாற்றத்திற்கு 0.4% MDR கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது.

ஆனால் இக்கட்டத்திற்கு வர்த்தகர்களும், மக்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இக்கட்டணம் நடைமுறைக்கு வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு, அதாவது அக்டோபர் 13ஆம் தேதி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், NPCI அமைப்பு UPI சேவை மீதான MDR கட்டணங்கள் தீபாவளி பண்டிகைக்கு பின்பு உடனடியாக அமலுக்கு வரும் என்றும், அமலாக்கம் செய்யப்படும் தேதி தனியாக அறிவிக்கப்படும் என NPCI தெரிவித்திருந்தது.

ஆனால் இதுவரையில் கட்டணம் நடைமுறைப்படுத்துவதற்கான தேதி அறிவிக்கப்படாத நிலையில், தீபாவளி கொண்டாட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், UPI மூலம் பணம் செலுத்தும்போது MDR (Merchant Discount Rate) கட்டணம் எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த கட்டண விதிப்பு மூலம் தனிநபர்கள் மத்தியிலான பண பரிமாற்றத்திற்கு எவ்விதமான கட்டணமும் விதிக்கப்படுவது இல்லை. தினமும் 1 லட்சம் ரூபாய் வரையில் எவ்விதமான கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ள முடியும். தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள கட்டணம் அனைத்தும் தனிநபர் - வர்த்தகர்கள் அடிப்படையிலான பேமெண்ட்டுக்கு மட்டுமே என்பதால் பெரிய பாதிப்பு இருக்காது. இதேபோல் 2000 ரூபாய் வரையில் கட்டணம் இல்லாத காணத்தால் சுமார் 60-70 சதவீத பேமெண்ட் இதற்குள்ளேயே வந்துவிடும். 2000 ரூபாய்க்கு அதிகமாக செலுத்தினால் மட்டுமே கட்டணம் நடைமுறைக்கு வரும்.

இதேபோல் சிறு வியாபாரிகள் தங்களுடைய யுபிஐ கணக்கில் மாதம் 1 லட்சம் ரூபாய்க்குள் பணத்தை பெற்றால், பெற்ற தொகை 4000,5000 ரூபாயாக இருந்தாலும் சரி, மாதம் முழுவதும் 1 லட்சம் ரூபாய்க்கு குறைவாக பெற்று இருந்தால் அவர்களுக்கு MDR கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகை மூலம் பெட்டி கடைக்காரர்கள், தெருவோர வியாபாரிகள் போன்றோர் பலன் அடைவார்கள். இந்த புதிய எம்டிஆர் கட்டணம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் 10000 ரூபாய் ஒரு ஷாப்பிங் மாலில் செலவு செய்தால் இதற்கு 40 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

தற்போது சந்தையில் நிலவும் பிரச்சனை என்னவென்றால் இந்த MDR கட்டணம் வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்க கூடாது என NPCI அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்தாலும், நடைமுறையில் இது சாத்தியமில்லை என்பது தான்.உதாரணமாக கிரெடிட் கார்டு மூலம் பேமெண்ட் செய்யும் போது அதற்கான கட்டணத்தை எப்படி கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறுகிறார்களோ, அதேபோல் இதையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற வேண்டிய கட்டாயம் உருவாகும். இல்லையெனில் கடைக்காரர்கள் UPI பேமெண்ட்களை வாங்குவதை தவிர்த்துவிட்டு, பழையப்படி ரொக்கமாக பணத்தை செலுத்த வாடிக்கையாளர்களிடம் கோரலாம். இது இரண்டுமே யூபிஐ வளர்ச்சிக்கு பாதிப்பு.

Source: Read Full Article