துப்பாக்கிச்சூட்டில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 3 பேர் படுகாயம் - என்ன நடந்தது காஷ்மீரில் ?

துப்பாக்கிச்சூட்டில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 3 பேர் படுகாயம் - என்ன நடந்தது காஷ்மீரில் ?
News Image

ஜம்மு காஷ்மீர் அருகே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் மிர் பஜார் பகுதியில் சோதனைச்சாவடி அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். இத்தாக்குதலில் படுகாயம் அடைந்த 3 சி.ஆர்.பி.எப் வீரர்கள், அனந்த்நாக்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து குல்காம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குலும் மறையாத வடுவும்!

2025 ஏப்ரல் 22-ஆம் தேதியன்று அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் குவிந்த சுற்றுலா பயணிகளுக்கு அது ஒரு துயரம் நிறைந்த நாளாக மாறிப்போனது. பயங்கரவாதிகள் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மொத்தமாக 26 பேர் கொல்லப்பட்டனர்.  இத்தாக்குதல் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பினால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இத்தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்த இந்திய விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் சரமாரி தாக்குதல் நடத்தின. ஆபரேசன் சிந்தூர் எனப்பெயரிடப்பட்ட இத்தாக்குதலில், பாகிஸ்தான் எல்லையோரப்பகுதியில் இயங்கி வந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட 9 பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்த முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

தொடர் கதையாகும் தாக்குதல்கள்!

காஷ்மீர் பகுதி என்றாலே பதற்றம்,பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை, பாதுகாப்பு படையினரின் கண்காணிப்பு உள்ளிட்டவை வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டிலும், குண்டுவெடிப்பிலும் வாழப்பழகிய காஷ்மீர் மக்கள் நிம்மதியான வாழ்வை வாழும் நாளை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks