ஜூனியர் ஆசியக்கோப்பை போட்டித்தொடர் ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது.8 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டித்தொடர் வருகிற 14-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இரு போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி ஒன்றில வெற்றியும், மற்றொன்றில் தோல்வியும் அடைந்துள்ளது.

அரையிறுதிக்குள் நுழையுமா இந்திய அணி?

இந்தியா இடம்பெற்றுள்ள குரூப் - 2 ஏ பிரிவில் ஏற்கனவே பாகிஸ்தான் அணி இடம் பெற்றுவிட்ட நிலையில் மற்றோரு அணியாக உள்நுழைய இந்தியா ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோததின. டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் பந்துவீச்சை தேர்வுசெய்த நிலையில், இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய இந்தியாவின் லக்ஷயா ராய்சந்தனி 17 ரன்கள் மட்டுமே ஆட்டமிழந்த நிலையில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஆர்யவீர் சேவாக் மற்றும் வி.கே.வினீத் ஜோடி 193 ரன்களை குவித்தது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஆர்யவீர் சேவாக், 168 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் உட்பட 160 ரன்களை விளாசினார். பிறகு களமிறங்கிய வீரர்கள் பெருமளவு பிரகாசிக்காமல் சொற்ப ரன்களில் வெளியேற 50 ஒவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்களை குவித்தது.

யார் இந்த ஆர்யவீர் சேவாக்?

இந்திய அணியின் முன்னாள் தொடக்க மற்றும் அதிரடி ஆட்டக்காரரான வீரேந்திர சேவாக்கின் மகன்தான் இந்திய ஆர்யவீர் சேவாக். U19 கிரிக்கெட் தொடரில் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு பலம் சேர்த்த ஆர்யவீர் சேவாக், தந்தையின் ஆட்டத்துக்கு சற்றும் சளைக்காதவர் என்பதை நிரூபித்துள்ளார்.இந்நிலையில் ஆர்யவீர் சேவாக்கின் அதிரடி சதத்தால் இந்தியா 309 என்ற எண்ணை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

Source: Read Full Article