நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?

நவ.20-இல் திருச்சி செல்லும் முதல்வர் - இடைத்தேர்தலை குறிவைத்து காய் நகர்த்தலா?
News Image

வருகிற 20-ஆம் தேதியன்று நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் திருச்சி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இடைத்தேர்தலை குறிவைக்கும் முதல்வர்?

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற தவெக, காங்கிரஸ், ஐ.யூ.எம்.எல், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. இத்தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொதிகளில் வெற்றிபெற்ற தவெக தலைவர் விஜய் இருதொகுதிகளிலும் வெற்றிபெற்ற நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் அதிமுகவை சேர்ந்த 6 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.

இரு தொகுதிகளையும் தன்வயப்படுத்திய தவெக

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், இரு தொகுதிகளிலும் ஏற்கனவே அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் தவெகவில் இணைந்த வேட்பாளர்களே வெற்றிக்கொடி நாட்டினர். இந்நிலையில் மீதமுள்ள 5 தொகுதிகளிலும் தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருந்ததன் காரணமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடைத்தேர்தல் தொகுதிகளை டார்கெட் செய்யும் முதல்வர்

மொத்தமாக காலியான 7 தொகுதிகளுள் இரு தொகுதிகளுக்கு இதுவரை இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதமுள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன.இந்நிலையில் இடைத்தேர்தலை நோக்கி காய்களை நகர்த்தி வரும் முதல்வர் விஜய் கடந்த 3-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் விஜய், சாலைவலமும் வந்து மக்களை ஆரவாரப்படுத்தினார். இதனையடுத்து வருகிற 14-ஆம் தேதியன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அம்பாசமுத்திரத்தில் நடைபெற உள்ள பள்ளிவிழாவில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு கேக் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நவ.20-இல் திருச்சியில் களமிறங்கும் முதல்வர்!

இதனைத்தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளுள் ஒன்றான திருச்சி கிழக்கை மையப்படுத்தி வருகிற 20-ஆம் தேதியன்று நலத்திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் வரவிருக்கும் நாட்களில் மீதமுள்ள தொகுதிகளிலும் முதல்வர் விஜய் தீவிரக்கவனம் செலுத்தக்கூடும் எனவும் கருதப்பாடுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks