TVK vs DMK: "வாய்கிழிய பேச்சு" பதிப்பகங்கள், நூல்கள் பட்டியலை வெளியிட முடியுமா? திமுக-விற்கு தவெக சரமாரி கேள்வி

TVK vs DMK: "வாய்கிழிய பேச்சு" பதிப்பகங்கள், நூல்கள் பட்டியலை வெளியிட முடியுமா? திமுக-விற்கு தவெக சரமாரி கேள்வி
News Image

கோவையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்திற்கு வாங்கப்பட்ட புத்தகங்களில் கடந்த ஆட்சியில் திமுக மிகப்பெரிய அளவில் ஊழல் செய்துள்ளதாக தவெக குற்றம் சாட்டியது. அதற்கு திமுக பதிலளித்ததுடன் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தவெக திமுக-விற்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக, அவர்கள் பதிவிட்டுள்ளதாவது,

ஒப்புக்கொள்ளவில்லை:

மானங்கெட்ட, துப்புகெட்ட,வெட்கம் கெட்ட, அறிவுகெட்ட தனமாகக் கட்சி நடத்துகிறவர்கள் ஒவ்வொரு துறையிலும் மாபெரும் ஊழல் செய்துவிட்டு இப்போது ஓவர் லாஜிக் பேசுவதுபோல ஊளையிடுகின்றனர். தீயசக்தியின் ஆட்சியில் வெளியிட்ட ஆணையை வெளியிட்டும் அதை நாங்கள்தான் ஆணையாகப் பிறப்பித்தோம் என்று ஒப்புக்கொள்ள துப்பில்லை ; வக்கில்லை. ஆனால், பரந்தாமன்களை வைத்து ஆத்திரத்தை மட்டுமே கொட்டி வருகிறது.

குடவாசல் என்பதைக்கூட கொடவாசல் என்று குளறுபடியாக இருந்தது குடைசாய்ந்த ஆட்சியின் துப்புகெட்ட அறிவுகெட்ட மானம்கெட்ட உஷார்தனத்தின் உடைசல்தான் அது. கேவலமான அரசியல் செய்யவில்லை என்று கூறிக்கொண்டே அப்படிப்பட்ட அரசியலைத்தான் செய்து வருகின்றனர்.

பட்டியலை வெளியிட வேண்டியதுதானே?

தங்களது தத்தி அரசாங்கம், முட்டாள் கவர்மெண்ட்தான் அனைத்து ஆணைகளையும் வெளியிட்டது. அதனடிப்படையில்தான் குழுக்கள் அமைக்கப்பட்டும் வெளியிடப்பட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே?. வெட்கம் கெட்ட வேலை வெட்டி அற்ற முதலமைச்சர் தலைமையில் நடந்த தீயசக்தி ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுக்கள் யாருடைய அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட்டது?.

நாங்கள் அமைத்த குழு, நாங்கள் அமைத்த குழு என்று வார்த்தைக்கு வார்த்தைக்கு வாய்கிழியப் பேசும் தங்கள் பிரதிநிதி வாயிலாகவே தங்கள் குழு பரிந்துரைத்த, தேர்வு செய்த பதிப்பகங்கள் மற்றும் நூல்களின் பட்டியலை வெளியிட வேண்டியதுதானே?.

ஆதாரம் எங்கே?

திமுக அறிவுடைய இயக்கம் என்று தனக்குத்தானே கூவிக்கொள்பவர்கள், தங்களின் தீயசக்தி திமுக ஆட்சியில் இருந்தது வரை தேர்வு செய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியலை வெளியிட்டு,, தவெக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதையும் நிரூபிக்கும் வகையில் பட்டியலை ஆதாரத்துடன் வெளியிட வேண்டியதுதானே? அதைச் செய்யாமல், வழவழா கொழகொழா கேள்விகளை வக்கற்ற, வகையற்ற ஆட்களை வைத்து கேட்பது ஏன்?.

கூமுட்டை அரைவேக்காடு:

திமுக குறிப்பிடும் பெயர்களில் புத்தகங்கள் தெரிவு செய்ய 2025 நவம்பரிலோ அல்லது 2026 பிப்ரவரியிலோ யாருடைய ஆட்சி நடந்தது?  இதை துப்புகெட்ட, அறிவுகெட்ட,
கூறுகெட்ட வாதாடியை வைத்தே வாதிடலாமே? அதை ஏன் திமுக செய்யவில்லை?  இல்லாத முகவரியில் ஆணை வெளியிட்டது துப்புகெட்ட,மானம்கெட்ட திமுக ஆட்சியில்தான் என்பதை ஒப்புக்கொள்ள தெம்பு இருக்கிறதா? திராணி இருக்கிறதா?.

இல்லாத பதிப்பகங்களையும் இல்லாத எழுத்தாளர்களையும் வைத்து கொள்முதல் செய்து ஊழல் செய்துவிட்டு சீல் வைக்கப்பட்ட தேதியை வைத்து, அன்றுதான் கொள்முதல் செய்ததாகக் கூறும் கூமுட்டை அரைவேக்காட்டு ஆளை வைத்து பேசிப்பேசி திமுகவே மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு கேவலப்பட்டு நிற்கிறது.

இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தவெக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks