தீபாவளியை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு உயர்வு! - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

தீபாவளியை முன்னிட்டு பூக்களின் விலை கிடு கிடு உயர்வு! - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
News Image

தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை, பலகாரங்கள் முக்கியமானவை என்றாலும், இவற்றுடன் பெண்களுக்கு பூக்கள் இன்றியமையாதவை. பெண்கள் புத்தாடைகள் உடுத்திவிட்டு தலைநிறைய பூவைச்சூடி செல்பி மற்றும் ரீல்ஸ் ஆக வெளியிடுவது வாடிக்கையாக உள்ளது. மேலும் சகோதரிகளுக்கு சீர்வரிசை கொண்டு செல்வது, ஆலய வழிபாடு என தீபாவளி சீசனில் பூக்களின் விலை சரமாரியாக உயரும்.

விண்ணை முட்டும் பூக்களின் விலை!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற தோவாளை மலர்ச்சந்தையில் தீபாவளி மட்டுமின்றி, தொடர்மழையினால் ஏற்பட்ட வரத்துக்குறைவின் காரணமாகவும் பூக்களின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதிகப்பட்சமாக பிச்சிப் பூ ரூ.2,500-க்கும், மல்லிகைப்பூ ரூ.2000-க்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளது.

மல்லிக்கு பெயர்பெற்ற மதுரையில் உள்ள ஒருங்கிணைந்த மலர்ச்சந்தையில், பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. திண்டுக்கல், விருதுநகர் பகுதிகளில் இருந்து இச்சந்தைக்கு பூக்கள் கொண்டுவரப்படும் நிலையில்,வரத்து குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மல்லி கிலோ ரூ. 1800-க்கும், பிச்சிப்பூ ரூ. 1000-க்கும், முல்லை ரூ. 1000-க்கும், கனகாம்பரம் ரூ. 2000 -க்கும் விற்பனையாகிறது.

வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

விழாக்காலங்களில் பூக்களின் விலை உயர்வது வாடிக்கையானது என்றாலும், விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள விலையால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 2000 முதல் 2500 வரை விலை உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் பூக்களை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks