TN Weather News: திசை மாறிய அக்வான் புயல்.. மீனவர்கள், வடமாவட்டங்களுக்கு இன்று வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை

TN Weather News: திசை மாறிய அக்வான் புயல்.. மீனவர்கள், வடமாவட்டங்களுக்கு இன்று வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
News Image

Tamil Nadu Weather Akvan Cyclone Update (18-11-2026): வங்கக் கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் காரணமாக தமிழக மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திசைமாறிய அக்வான் புயல்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவின் மத்தியப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த அக்வான் புயலானது, மெதுவாக வடக்கு நோக்கி நகர்ந்து, அதே பகுதியில், அட்சரேகை 12.5°வ மற்றும் தீர்க்கரேகை 85.6°கிழக்கு அருகே நேற்று மையம் கொண்டிருந்தது. இது சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கே சுமார் 590 கி.மீ., திருகோணமலைக்கு (இலங்கை) வடகிழக்கே 640 கி.மீ., மச்சிலிப்பட்டணத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 630 கி.மீ., விசாகப்பட்டணத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்-தென்கிழக்கே 630 கி.மீ. மற்றும் கோபால்பூருக்கு (ஒடிசா) தெற்கே 760 கி.மீ. தொலைவில் அமைந்திருந்தது. தொடர்ந்து இன்று காலை வாக்கில், மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் மெதுவாக வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஒரு கடுமையான புயலாக மாற அதிக வாய்ப்புள்ளது.

மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் காற்று:

அதன்பிறகு, அது வடமேற்கு திசையில் நகர்ந்து, 2026 நவம்பர் 19 ஆம் தேதி மாலை வாக்கில் மேலும் தீவிரமடைந்து மிகக் கடுமையான புயலாக மாற வாய்ப்புள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, அது 2026 நவம்பர் 20 ஆம் தேதி நண்பகல் வாக்கில், நெல்லூர் மற்றும் விசாகப்பட்டினத்திற்கு இடையே ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைகளைக் கடக்கும்போது, ​​மணிக்கு 120-130 கி.மீ. வேகத்தில் அதிகபட்ச தொடர் காற்று வேகத்துடனும், மணிக்கு 145 கி.மீ. வரை அதிகரிக்கும் திடீர் காற்று வேகத்துடனும் மிகக் கடுமையான புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது” என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

இதனிடையே நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ”இன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த 2 நாட்களுக்கான வானிலை விவரம்:

19-11-2026: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

20-11-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

18-11-2026: வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

19-11-2026: வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

20-11-2026: வட தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks