தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு டாஸ்மாக்கில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதாவது தவெக ஆட்சி பொறுப்பெற்றதும் 4,775 டாஸ்மாக் கடைகள் இருந்த நிலையில் 717 கடைகள் மூடப்பட்டதை அடுத்து தற்போது 4,048 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 100 கோடிக்கு அளவுக்கு மது விற்பனையாகிறது. அதுவும் வார விடுமுறை மற்றும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை தினங்களில் வருமானங்கள் இரட்டிப்பாகும். நாளுக்கு நாள் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதன் வருமானமும் உச்சத்தை எட்டி வருகிறது.

டாஸ்மாக் கடைகள்

பண்டிகை காலங்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் விடுமுறை என்பதே இல்லை. அதாவது ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் திருவள்ளூர் தினம், குடியரசு தின விழா, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், மகாவீர் ஜெயந்தி, தொழிலாளர் தினம், சுதந்திர தினம், மிலாது நபி, காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதைவும் படிங்க: Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!

விடுமுறை நாட்கள்

இந்நிலையில் முதல்வர் விஜய் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பண்டிகை நாட்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது பொங்கல், தீபாவளி, புத்தாண்டு பண்டிகை நாட்களிலும், அதற்கு முந்தைய நாளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடிமகன்கள் பேரதிர்ச்சி

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் டாஸ்மாக் ஊழியர்கள் குஷியில் இருந்து வந்தாலும், குடிமகன்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைவும் படிங்க: School Holiday: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளியை போன்று 3 நாட்கள் தொடர் விடுமுறை! எப்போது தெரியுமா?

என்ன காரணம்?

தமிழக அரசு இது போன்ற முக்கிய முடிவு எடுக்க காரணம் நடந்த முடிந்த தீபாவளி பண்டிகையின் போது தமிழகத்தில் 11 படுகொலை சம்பவங்கள் அரங்கேறியது. தமிழகத்தில் ஆளும் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருப்பதாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் டெல்லி பயணம்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து ஆளுநர் அர்லேகரிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் நாளை தமிழக ஆளுநர் அர்லேகர் சந்திக்க உள்ளார்.

Source: Read Full Article