TASMAC: குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்...100 மீட்டருக்குள் பார்.. தமிழக அரசின் புது ரூல்ஸ்! முழு விவரம் இதோ!

TASMAC: குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்...100 மீட்டருக்குள் பார்.. தமிழக அரசின் புது ரூல்ஸ்! முழு விவரம் இதோ!
News Image

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு டாஸ்மாக் கடைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதாவது 4700க்கும் மேற்பட்ட டாஸ்டாக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள மதுக்கடைகள் என மொத்தம் 717 கடைகள் மூடப்பட்டதை அடுத்து தற்போது 4,048 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பாட்டிலுக்கு கூடுதலாக வசூல் செய்வதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் நேற்று முதல் டாஸ்மாக் கடைகளில் ரூ.1,000-க்கு மேல் மது பாட்டில்கள் வாங்குவோர் ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் பார் அமைக்க தமிழக அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களுக்கு புதிய விதிமுறைகள்

* புதிய கட்டுப்பாடுகள் பார்கள் வழிபாட்டுத் தலங்கள் அல்லது கல்வி நிறுவனங்களிலிருந்து குறிப்பிட்ட தூரத்திற்குள் அமையக்கூடாது.

* "bar" என்பது கடையை ஒட்டி அமைந்துள்ள அல்லது கடையிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ள, கார்ப்பரேஷனின் சில்லறை விற்பனைக் கடைகளில் வாங்கப்பட்ட மதுவை அங்கேயே அருந்த அனுமதிக்கப்பட்ட இடம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது

* அங்கீகரிக்கப்பட்ட கடைகள் மற்றும் பார்களின் பட்டியலை 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும்.

*  டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை நடத்த தனியாருக்கு ஒப்பந்தப்புள்ளி (Tender) மூலம் அனுமதி வழங்கப்படும்.

* ஒவ்வொரு கடையும் தனித்த அடையாள அறிவிப்பு பலகை (Signage) கொண்டிருக்க வேண்டும்.

* ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும்.

* கடை எண் மற்றும் உரிய அனுமதி விவரங்கள் இடம்பெற வேண்டும்.

* கடை மற்றும் பார் செயல்படும் நேரம்.  தினமும் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் செயல்பட வேண்டும்.

* இரவு 10 மணிக்குப் பிறகு பார்களில் மது அருந்த அனுமதி இல்லை.

பார் அமைக்க தடை

* புதிய கட்டுப்பாடுகள் பார்கள் வழிபாட்டுத் தலங்கள் அல்லது கல்வி நிறுவனங்களிலிருந்து குறிப்பிட்ட தூரத்திற்குள் அமையக்கூடாது.

* தூரம் பார் நுழைவாயிலிலிருந்து வழிபாட்டுத் தலம்/கல்வி நிறுவனத்தின் நுழைவாயில் வரை அளவிடப்படும்.

* வளர்ச்சி / நகர திட்ட அமைப்புகளால் 'வணிக' அல்லது 'தொழில்துறை' பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தூரக் கட்டுப்பாடு பொருந்தாது.

* எந்தவொரு ஹோட்டல் வளாகத்திற்குள்ளும் பார் அமைக்கக்கூடாது.

* வேலூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் மற்றும் மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட பகுதிகளில் பார் அமைக்கக்கூடாது.பார் அமைவிடம் TASMAC மேலாண் இயக்குநரால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

* 21 வயது பூர்த்தியடையாதவர்களுக்கு மது விற்கக்கூடாது. அவர்கள் பாருக்குள் அனுமதிக்கப்படக்கூடாது, மது அருந்த அனுமதிக்கக்கூடாது. பார் நடத்துபவரே பொறுப்பு. வயது குறித்த சந்தேகம் ஏற்பட்டால், மத்திய/மாநில அரசு / கல்வி நிறுவனம் / உள்ளாட்சி அமைப்பு வழங்கிய ஆவண ஆதாரம் கோரலாம். 21 வயதுக்குட்பட்டவர்களை கடை அல்லது பாரில் பணியமர்த்தக்கூடாது.

* வெவ்வேறு அளவிலான மதுபான பாட்டில்களின் விலைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

* டாஸ்மாக் கடைகளின் தினசரி விற்பனை, மதுபான இருப்பு மற்றும் விற்பனைத் தொகை உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிட்ட மின்னணுப் படிவங்களில் பராமரிக்கப்பட வேண்டும்.

* கடைகள் மற்றும் பார்கள் திருவள்ளுவர் தினம் (ஜனவரி), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்தநாள், வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் மே தினம் ஆகிய நாட்களில் மூடப்பட்டிருக்க வேண்டும். அரசு / மதுவிலக்கு ஆணையர் / ஆட்சியர் உத்தரவின்படியும் மூடப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் கடையின் பரிவர்த்தனைகள் மின்னணு படிவங்களில் உண்மையான கணக்காக பராமரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks