"நைட் குடிக்கலனா எனக்கு தூக்கம் வராது" - டாஸ்மாக் மூடியதால் புலம்பும் மதுப்பிரியர்கள்

"நைட் குடிக்கலனா எனக்கு தூக்கம் வராது" - டாஸ்மாக் மூடியதால் புலம்பும் மதுப்பிரியர்கள்
News Image

திருவாரூரில் டாஸ்மாக் மூடப்பட்டதால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது. மன மகிழ் மன்றத்தில் குவிந்த மதுப் பிரியர்கள் அங்கும் கடை மூடப்பட்டதால் ஆத்திரத்துடன் சென்றனர்.

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டிலை திரும்ப பெரும் திட்டத்தை அமல்படுத்தி அதற்கான 10 ரூபாயை எம்ஆர்பி விலையில் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கு கடைகளை மூடி டாஸ்மாக்  ஊழியர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மாலை நேரத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டப. குறிப்பாக திருவாரூர் நகரத்திற்குட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மன மகிழ் மன்றத்தில் மதுப் பிரியர்கள் குவியத் தொடங்கினர்.

இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்டம் அதிகமாக இருப்பதால் கடை உரிமையாளர் கடையை மூடியதுடன் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்ட நிலையில் கேட்டின் முன்பு காத்திருந்த மதுப்பிரியர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். அப்போது அங்கு காத்திருந்த மதுப் பிரியர் ஒருவர் வாருங்கள் 10 பேர் சேர்ந்து உட்கார்ந்து போராடுவோம் என்றும் இரவு குடிக்க வேண்டும், இல்லை என்றால் எனக்கு தூக்கம் வராது என்றும் போலீசார் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து போலீசார் பத்து நிமிடத்தில் டாஸ்மாக் கடை திறந்து விடுவார்கள் என்று கூறி கூட்டத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் இன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நேற்று கடையை மூடி எதிர்ப்பு தெரிவித்திருந்த டாஸ்மாக் ஊழியர்கள் இன்றும் பணிக்கு வரமாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks