Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது! வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!

Tamilnadu Rain: இனி தீபாவளிக்கு நோ பிராப்ளம்.. மழை இடையூறு இருக்காது!  வெதர்மேன் வெளியிட்ட குஷி அப்டேட்!
News Image

தமிழகத்தில் தென்கிழக்கு பருவமழை ஏமாற்றியதை அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று அதிகாலை சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

25 மாவட்டங்களில் மழை

இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 25 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இனி தீபாவளி கொண்டாங்களுக்கு எந்த இடையூறும் இருக்காது என டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தீபாவளி நாளில் சென்னையை வெளுத்து வாங்கிய கனமழை! நீரில் மூழ்கிய சுரங்கப்பாதைகள்!

இனி மழை இடையூறு இருக்காது

இதுதொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னை & புறநகர் பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்தது. இனி தீபாவளி கொண்டாங்களுக்கு எந்த இடையூறும் இருக்காது. மத்திய  கடலோர மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால்,  நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மாவட்டத்தில் அங்காங்கே விட்டு விட்டு இடி, மின்னலுடன் கூடிய மழையும் அவ்வப்போது கனமழையும்  எதிர்ப்பார்க்கலாம். மத்திய உள் மாவட்டங்கள் & மேற்கு மாவட்டங்களில் வரும் மணி நேரத்தில் மழை படிப்படியாக பரவலாகும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு

அதேபோல் தமிழ்நாடு அரசின் எல் நினோ தாக்க ஆய்வுக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்:  தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் தீபாவளி நாளான இன்று கடலூர், டெல்டா முதல் தென்தமிழகம் வரை பரவலான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அதேபோல் சென்னை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை காலை வரை மழையில் இடைவெளி இருக்கும். நாளை காலை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்; அதனைத் தொடர்ந்து, அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு இப்பகுதிகளில் மழை இருக்காது. அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் (KTCC): நாளை காலை வரை மழையில் இடைவெளி இருக்கும். நாளை காலை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்; அதன்பிறகு அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு இப்பகுதிகளில் மழை இருக்காது என தெரிவி்ததுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks