கோவை- பீகார் இடையே சிறப்பு ரயில்!  தீபாவளி கூட்ட  நெரிசலை தவிர்க்க நடவடிக்கை!

கோவை- பீகார் இடையே சிறப்பு ரயில்!  தீபாவளி கூட்ட  நெரிசலை தவிர்க்க நடவடிக்கை!
News Image

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது.  குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள்.

இந்த நிலையில் , தீபாவளி பயணத்தின் போது கூட்ட நெரிசலை தவிர்க்க கோவை- பீகார் இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் ரேணிகுண்டா வழியாக ஆந்திரா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைக் கடந்து பீகாரைச் சென்றடைகிறது.

தீபாவளி மற்றும் சத் பூஜை பண்டிகைகளைக் முன்னிட்டு, பயணிகளின் கடும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு கோவை போத்தனூர் மற்றும் பீகார் மாநிலம் பரௌனி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நீண்ட தூரம் பயணம் செய்யும் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரயில் இயக்க விவரங்கள்:

போத்தனூர் - பரௌனி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06079):

இந்த சிறப்பு ரயில் வருகிற நவம்பர் 07, 2026 அன்று இரவு 21.55 மணிக்கு போத்தனூர் சந்திப்பில் இருந்து புறப்பட்டு பரௌனி சென்றடைகிறது.

பரௌனி - போத்தனூர் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06080):

மறுமார்க்கமாக, பரௌனியிலிருந்து வருகிற நவம்பர் 10, 2026 அன்று இரவு 23.30 மணிக்கு இந்த சிறப்பு ரயில் புறப்பட்டு போத்தனூரை நோக்கி வருகிறது.

முக்கிய வழித்தடங்கள் மற்றும் நிறுத்தங்கள்:

இந்த ரயிலானது கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும் ரேணிகுண்டா வழியாக ஆந்திரா, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைக் கடந்து பீகாரைச் சென்றடைகிறது. வழியில் விஜயவாடா, நாக்பூர், ஜபல்பூர், பிரயாக்ராஜ் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class), இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள் (Second Class Chair Car), பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (General Second Class) மற்றும் லக்கேஜ் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு ரயில்களுக்கான பயண முன்பதிவு (நவம்பர் 06, 2026) பிற்பகல் 3.00 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பயணிகள் அனைவரும் கடைசி நேரக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே தங்களது பயணச்சீட்டுகளைப் பதிவு செய்து கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks