Spcl Bus Train: சென்னை திரும்பும் மக்களே..! சிறப்பு பேருந்துகள், ரயில்கள் - இன்றும், நாளையும், எங்கிருந்து எத்தனை இயக்கம்?

Spcl Bus Train: சென்னை திரும்பும் மக்களே..! சிறப்பு பேருந்துகள், ரயில்கள் - இன்றும், நாளையும், எங்கிருந்து எத்தனை இயக்கம்?
News Image

Spcl Bus Train: தீபாவளி பண்டிகையை முடித்துக்கொண்டு சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவோருக்கு ஏதுவாக, இயக்கப்படும் பேருந்துகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

வெளியூர்களுக்கு படையெடுத்த மக்கள்:

தீபாவளி பண்டிகையை ஒட்டி 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால், பணி நிமித்தமாக சென்னையில் தங்கியிருந்த ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். அந்த வகையில் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் உள்ளிட்டவை மூலமாக, சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னையில் இருந்து வெளியேறினர். விடுமுறை முடிந்ததை தொடர்ந்து பொதுமக்கள் இன்று முதல் மீண்டும் சென்னை திரும்ப தயாராகி வருகின்றனர். எந்தவித சிரமமும் இன்றி அவர்கள் பயணங்களை மேற்கொள்ள போக்குவரத்து துறை சார்பில் இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று முக்கிய இணைப்பு பகுதிகளிலிருந்து சிறப்பு ரயில் சேவைகளும் இயக்கப்படும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!

போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப ஏதுவாக இன்றும், நாளையும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி இன்றும் நாளையும் 11 ஆயிரத்து 197 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வழக்கமாக 4 ஆயிரத்து 382 பேருந்துகள் இயக்கப்படும். அவற்றுடன் சேர்த்து கூடுதலாக 6 ஆயிரத்து 815 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 11 ஆயிரத்து 197 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி பயணிக்க இயக்க முடியும் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: Toyota Innova Hycross: பவர்ட்ரெய்னில் மாற்றம்..! இன்னோவா ஹைக்ராஸில் டொயோட்டாவின் டாப் 5 அப்க்ரேட்கள்

சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு:

மாநில போக்குவரத்து துறையை போன்று மத்திய ரயில்வே துறையும், சிறப்பு சேவையை அறிவித்துள்ளது. அதன்படி, திருச்சியில் இருந்து இன்று இரவு 10.45 மணிக்கு சென்னை எழும்பூருக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மானாமதுரையில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு தாம்பரம் வரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. கோவை மாவட்டம் போத்தனூரில் இருந்து இன்று இரவு 8.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks