Sonia Gandhi: "இந்திரா காந்தியை அம்மானு கூப்பிட விருப்பமில்ல..." உண்மையை உடைத்த சோனியா காந்தி

Sonia Gandhi: "இந்திரா காந்தியை அம்மானு கூப்பிட விருப்பமில்ல..." உண்மையை உடைத்த சோனியா காந்தி
News Image

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் மனைவியுமானவர் சோனியா காந்தி. ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை நீண்ட காலமாக வழிநடத்திய பெருமைக்குரியவர்.

மாமியார் - மருமகள் உறவு:

இவர் தனது வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீடு நேற்று டெல்லியில் அதிகாரப்பூர்வமாக நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய சோனியா காந்தி மறைந்த பிரதமர் இந்திரா காந்திக்கும் தனக்குமான மாமியார் - மருமகள் உறவு பற்றி பேசியுள்ளார்.

அம்மா என்று அழைப்பதா?

அப்போது, அவர் கூறியதாவது,  இந்திரா காந்தியை நான் அம்மா அல்லது மம்மி என்று அழைக்க வேண்டியிருந்தது. ஆனால், அவரை அப்படி அழைக்க எனக்கு துளியளவும் விருப்பமில்லை. என்னைப் பொறுத்தமட்டில் அம்மா என்றால் அவர் ஒருவர் மட்டுமே ஆவார். அவர் எனது அம்மா. இத்தாலியைச் சேர்ந்த எனது தாய் மட்டுமே ஆவார். இதனால், நான் இந்திரா காந்தியை அம்மா என்று அழைக்கத் தயாராக இல்லை.

🚨 SONIA GANDHI - "I was supposed to call Indira Gandhi either Maa or Mummy. That was something I absolutely was not going to do. Because to me, there was only one Maa, and that was my MAMMA, my Italian mother, and I was not going to call her mother. I used to go around trying to figure out a way to approach her indirectly without having to call her mother. Then, of course, slowly, as I got to know her, I could call her, but it took time"
— News Algebra (@NewsAlgebraIND) November 16, 2026

அவரை அம்மா என்று அழைக்காமல் வேறு எப்படி அழைக்கலாம் என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். பின்னர், அவருடன் பழக பழக அவரை அம்மா என்று அழைக்கும் சூழல் உருவானது. ஆனாலும், எனக்கு அதற்கு சிறிது காலம் தேவைப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

சுயசரிதையில் விமர்சனங்கள்:

சோனியா காந்தி அடிப்படையில் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். ராஜீவ்காந்தியின் படிப்பின்போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி பின்னர் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், இந்திரா காந்தி தனது மெய்க்காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன்பின்னர், ராஜீவ்காந்தி தமிழ்நாட்டில் கொலை செய்யப்பட்டார்.

சோனியா காந்தி தனது சுயசரிதையில் பல்வேறு விவரங்கள் குறித்து எழுதியுள்ளார். இதில் உள்ள பல நிகழ்வுகளுக்கு பாஜக-வினரும், காங்கிரசின் முன்னாள் தலைவர்கள் சிலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எமர்ஜென்சியை சோனியா காந்தி நியாயப்படுத்தியுள்ளதாகவும், மற்ற காங்கிரஸ் தலைவர்கள் தியாகம் பற்றி குறிப்பிடவில்லை என்றும் பலரும் விமர்சித்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks