தாரமங்கலம் பவளத்தானூர் ஏரியில் கோழிக்கழிவு, குப்பை கொட்டி எரிப்பு; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தாரமங்கலம் பவளத்தானூர் ஏரியில் கோழிக்கழிவு, குப்பை கொட்டி எரிப்பு; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மருத்துவக் கழிவுகளும் கொட்டப்படுவதாக 2022-ல் செய்தி வெளியானது; இன்றும் தொடர்வதாக புகார்


சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பவளத்தானூர் ஏரியில் கோழிக்கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதன் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தாரமங்கலம் பவளத்தானூர் ரவுண்டானா அருகே உள்ள இந்த ஏரி, 2018-ம் ஆண்டு வரை நெடுஞ்சாலை அமைக்கப்படாத நிலையில் ஒரே ஏரியாக இருந்தது. பின்னர் 2019-20 காலகட்டத்தில் ஏரி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, சேலத்தில் இருந்து தாரமங்கலம் வரும் வாகனங்களும், சங்ககிரி வழியாக ஓமலூர் செல்லும் வாகனங்களும் இணையும் வகையில் சந்திப்பு உருவாக்கப்பட்டது.


இந்த வழியில் கடைகள் அதிகரித்த நிலையில், கோழிக்கடை நடத்துபவர்கள் உள்ளிட்டோர் தங்களது கழிவுகளை இரவு நேரத்தில் ஏரிப் பகுதியில் கொண்டு வந்து கொட்டிச் செல்வதாக கூறப்படுகிறது. நேற்று இரவு அந்தப் பகுதியில் நேரில் சென்று பார்த்தபோது, ஏராளமான கோழிக்கழிவு மூட்டைகள் குவிக்கப்பட்டிருந்தன. குப்பைகள் கொட்டப்பட்டு, எரிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இது சமீபத்தில் தொடங்கிய பிரச்சினை அல்ல என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நிலைமை மோசமாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதே ஏரியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக 2022-ம் ஆண்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அந்த நடவடிக்கையும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாகியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதைக் கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தாரமங்கலம் நகராட்சி மற்றும் சேலம் மாநகராட்சி நிர்வாகங்கள் உடனடியாக இந்தப் பகுதியை ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் இதுபோன்ற நீர்நிலைகள் வேறு எங்கெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன என்பதும் தெரியவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

நேற்று இரவு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதற்கான ஆதாரமாக உள்ளன.

சேலம் மாவட்ட செய்தியாளர் ஜான் பாபு.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks