தமிழகத்தில் அரசு விடுமுறையை தவிர்த்து அவ்வப்போது கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயம் மற்றும் தலைவர்களின் நினைவு நாள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டதை அடுத்து உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழா

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2026 (வியாழன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

இதையும் படிங்க: School Holiday: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தீபாவளியை போன்று 3 நாட்கள் தொடர் விடுமுறை! எப்போது தெரியுமா?

உள்ளூர் விடுமுறை

இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடு செய்யும் விதமாக டிசம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை (12.12.2026) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

வங்கிகளுக்கு பொருந்தாது

எனினும், உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881) இதன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் 03.12.2026 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article