சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!

சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
News Image

பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம்.

சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்பட்டது. நாளை அதிகாலை இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும். இங்கு இன்று மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். பின்னர் கோயிலை வலம் வந்து 18 படிகள் வழியாக இறங்கிவந்து ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்ப்பார். தொடர்ந்து இருமுடி கட்டுடன் 18 படிகளின் கீழே நின்று கொண்டிருக்கும் புதிய மேல் சாந்திகளான சபரிமலை - சுப்ரமணியன் நம்பூதிரி, மாளிகைபுறம் - தாமோதரன் நம்பூதிரி ஆகியோரை சன்னிதானம் முன்புறம் அழைத்து வருவார்.

இவர்களுக்கு தந்திரி பிரம்ம தத்தன் அபிஷேகம் செய்து மூலமந்திரம் சொல்லிக் கொடுத்து முறைப்படி அவர்களை மேல் சாந்திகளாக பதவியேற்க செய்வார். இன்று இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல் சாந்தி சுப்பிரமணியன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும். தொடர்ந்து 40 நாட்கள் பூஜைகள் நடைபெற்று 41-வது நாள் மண்டல பூஜை நடைபெற உள்ளது. எல்லா நாட்களிலும் ஐயப்பனுக்கு களபாபிஷேகம் உண்டு.

பக்தர்கள் படியேறுவதை ஒன்றரை மணி நேரம் நிறுத்தி வைக்க வேண்டும் என்பதால், மண்டல காலத்தில் படி பூஜை கிடையாது. அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து மதியம் ஒரு மணி வரையிலும், மாலை 3:00 மணிக்கு நடை திறந்து இரவு 11:00 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். தினமும் அதிகபட்சம் 80,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி. ஆன்லைன் முன்பதிவு கட்டாயம். இதற்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மேற்கொண்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks