வங்கதேசத கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜோஹன்ஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது.

22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்:

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ரபாடா, யான்சென், பாட்டர்சன் போன்ற பலமான பந்துவீச்சாளர்களை கொண்ட தென்னாப்பிரிக்காவை வங்கதேசம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது? என்றே அனைவரும் கருதினர்.

அதற்கு ஏற்ப தொடக்க வீரர் இஸ்லாம் முதல் பந்திலே அவுட்டாக, அடுத்து வந்த மோமினுல் ஹக் அவரும் டக் அவுட்டானார்கள். அடுத்து வந்த கேப்டன் ஷான்டோவும் 12 ரன்னில் அவுட்டாக 22 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது வங்கதேசம்.

அட்டகாசமான பேட்டிங்:

அப்போது, ஜோடி சேர்ந்த தமீம் - தெளஹித் ஜோடி பொறுப்புடன் ஆடினர். தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சமாளித்து களத்தில் ஏதுவான பந்துகளை மட்டும் ரன்களாக மாற்றினர். சிறப்பாக ஆடிய தமிம் அரைசதம் விளாசினார். அவர் 108 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்து அவுட்டாக, அடுத்து வந்த அனுபவ வீரர் முஷ்பிகிர் ரஹிம் டக் அவுட்டானார்.

தெளஹித் சதம்:

பின்னர் வந்த விக்கெட் கீப்பர் லிட்டன் தாசுடன் தெளஹித் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடினார். அபாரமாக ஆடிய தெளஹித் அரைசதம் விளாசினார். அதன்பின்னரும் இ்ந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. தெளஹித் மிகவும் நிதானமாக ஆட களத்தில் வங்கதேசத்தின் கை ஓங்கியது. தொடர்ந்து அபாரமாக ஆடிய தெளஹித் சதம் விளாசினார்.

தெளஹித் ஹிரிதாய் 227 பந்துகளில் 14 பவுண்டரி 1 சிக்ஸருடன் 137 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுமுனையில் அபாரமாக ஆடி வரும் லிட்டன்தாஸ் அரைசதம் கடந்து சதத்தை நோக்கி முன்னேறி வருகிறார். வங்கதேச அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. லிட்டன் தாஸ் 138 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 92 ரன்கள் எடுத்துள்ளார்.

வங்கதேசம் ஃபயர்மோட்:

வங்கதேச அணி எளிதில் தென்னாப்பிரிக்க மண்ணில் சுருண்டுவிடும் என்று கருதிய தென்னாப்பிரிக்க ரசிகர்களுக்கு வங்கதேசம் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த போட்டியில் வங்கதேசம் 500 ரன்களுக்கு மேல் குவித்தால் அவர்கள் தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவதும் எளிதாக அமையும். வங்கதேசம் இழந்த 6 விக்கெட்டுகளில் தென்னாப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதனால், எஞ்சிய 4 விக்கெட்டுகள் மூலமாக ரன்களை குவிக்க வங்கதேசம் முனைப்பு காட்டும் என்பது உறுதியாகும்.

Source: Read Full Article