49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை

49 ஆண்டுகளாகத் தனிமையில் பயணம்! 2590 கோடி கி.மீ. தொலைவில் வாயேஜர்-1:  விண்வெளியில் ஒலிக்கும் தமிழின் பெருமை
News Image

தஞ்சாவூர்: இரவு வானத்தைப் பார்க்கும்போது நட்சத்திரங்களுக்கு அப்பால் என்ன இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். அந்தக் கேள்விக்கான விடையைத் தேடும் மனிதனின் முயற்சியில் உருவானதுதான் வாயேஜர்-1 விண்கலம். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 1977 செப்டம்பர் 5-ந்தேதி இந்த விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

வியாழன், சனி கோள்களை ஆய்வு செய்வதே இதன் ஆரம்ப இலக்காக இருந்தது. ஆனால், அந்தப் பயணம் எதிர்பாராத வரலாற்றுச் சாதனையாக மாறியது. 2012-ம் ஆண்டு சூரியனின் ஆதிக்க எல்லையான ஹீலியோபாஸைக் கடந்து விண்மீன்களுக்கு இடையேயான பகுதியில் நுழைந்த முதல் மனிதனால் உருவாக்கப்பட்ட விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது.

தற்போது வாயேஜர்-1 பூமியிலிருந்து சுமார் 2590 கோடி கிலோ மீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருக்கிறது. வரும் நவம்பர் 18-ந்தேதி ஒரு ஒளி நாள் தொலைவை எட்ட உள்ளது. அதாவது, ஒளி ஒரு நாளில் கடக்கும் தொலைவு! ஒளி ஒரு நொடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் பயணிக்கிறது. இந்த வேகத்தில் 24 மணி நேரம் பயணித்தால் கிடைக்கும் தொலைவுதான் ஒரு ஒளி நாள். இதை எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், சூரிய ஒளி பூமியை வந்தடைய சுமார் 8 நிமிடங்கள் ஆகின்றன.

ஆனால், வாயேஜர்-1-ல் இருந்து அனுப்பப்படும் தகவல் பூமியை வந்தடைய சுமார் 24 மணி நேரம் ஆகும். பூமியில் இருந்து அனுப்பும் கட்டளை விண்கலத்தைச் சென்றடையவும் ஒரு நாள் தேவைப்படும். பதில் கிடைக்க மேலும் ஒரு நாள் காத்திருக்க வேண்டும். இதுவே விண்வெளியின் பிரம்மாண்டம்!

இவ்வளவு ஆண்டுகளாக இயங்கும் இந்த விண்கலத்துக்கு மின்சாரம் எப்படி கிடைக்கிறது தெரியுமா? இதில் புளூட்டோனியம்-238 பயன்படுத்தப்படும் சிறப்பு மின்சக்தி அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், காலப்போக்கில் மின்சார உற்பத்தி குறைந்து வருவதால் முக்கியமான கருவிகள் தொடர்ந்து இயங்குவதற்காக தேவையற்ற சாதனங்களை நாசா அணைத்து வருகிறது. 2026 செப்டம்பரில் மின்சாரத்தைச் சேமிக்கும் புதிய தொழில்நுட்ப மாற்றங்களையும் மேற்கொண்டுள்ளது.

கடந்த அக்டோபரில் 48 மணி நேரம் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் கிடைத்தது. ஒருநாள் பூமியுடனான தொடர்பு முற்றிலும் முடிவுக்கு வந்தாலும் விண்கலத்தின் பயணம் மட்டும் நின்றுவிடாது. இன்னும் சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கிளீசே 445 என்ற விண்மீனுக்கு அருகே செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

வாயேஜர்-1-ல் இருக்கும் மற்றொரு அதிசயம் தங்க முலாம் பூசப்பட்ட 'கோல்டன் ரெக்கார்டு'. இதில் பூமியின் இயற்கை ஒலிகள், பறவைகளின் குரல்கள், இசை, மனிதர்களின் வாழ்த்துகள் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 55 மொழிகளில் வாழ்த்துகள் இடம்பெற்றுள்ளன. அதில் தமிழ்மொழியும் இடம்பெற்றிருப்பது நமக்குப் பெருமை சேர்க்கும் விஷயம். மேலும் பூமியின் வாழ்க்கை, இயற்கை, அறிவியல், கலாசாரம் ஆகியவற்றை விளக்கும் 115 புகைப்படங்களும் இதில் உள்ளன.

எதிர்காலத்தில் வேறொரு கிரகத்தைச் சேர்ந்த அறிவார்ந்த உயிரினங்கள் இந்த விண்கலத்தைக் கண்டுபிடித்தால், பூமியையும் மனிதர்களையும் அறிந்துகொள்ள இந்தப் பதிவுகள் உதவும் என்பதே விஞ்ஞானிகளின் நோக்கம்.

1990-ம் ஆண்டு வாயேஜர்-1 சுமார் 600 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருந்து பூமியைப் படம் எடுத்தது. 'பேல் புளூ டாட்' என்று அழைக்கப்படும் அந்தப் புகைப்படத்தில் பூமி ஒரு சிறிய நீலப் புள்ளியாக மட்டுமே தெரிந்தது. பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தில் நமது பூமி எவ்வளவு சிறியது என்பதை அந்தப் படம் உணர்த்தியது. தற்போது ஒரு ஒளி நாள் தொலைவை எட்டப்போகும் வாயேஜர்-1, மனிதனின் அறிவியல் திறமைக்கும் தேடலுக்கும் மற்றொரு சான்றாக மாறியுள்ளது.

தகவல் தொடர்பு ஒருநாள் துண்டிக்கப்படலாம்; ஆனால் மனிதனின் மொழியையும் கலாசாரத்தையும் சுமந்து செல்லும் அதன் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்!

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks