Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
News Image

தீபாவளி பண்டிகை தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் செல்ல திட்டமிட்டுள்ளனர். பொதுவாக, தமிழகத்தில் தீபாவளிக்கு மட்டுமே அரசு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.

தீபாவளி பண்டிகை

இந்நிலையில் தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் திரும்புவதற்கு ஏதுவாக தீபாவளி மறுநாள் அதாவது நவம்பர் 9ம் தேதி திங்கள் கிழமை அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதேபோல் ரேஷன் கடை பணியாளர்களும் நவம்பர் 9ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: School Leave: இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.! பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!

ரேஷன் கடை ஊழியர்கள்

இதுதொடர்பாக தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகியவற்றுக்கான தொடர் விடுமுறை காரணமாக, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள், ரேஷன் அட்டைதாரர்களை சென்றடைவதை உறுதி செய்வதற்காக அக்டோபர் 18ம் தேதியன்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: TASMAC: குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்...100 மீட்டருக்குள் பார்.. தமிழக அரசின் புது ரூல்ஸ்! முழு விவரம் இதோ!

தீபாவளி மறுநாள் விடுமுறை

அதை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 21ம் தேதி அன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை தினமான 8-ம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) அடுத்த நாளான 9-ம் தேதியை விடுமுறை நாளாக, அதாவது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட 21.11.2026 தேதிக்கு மாற்றாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கையை ஏற்று, வரும் 9-ம் தேதியை விடுமுறை நாளாகவும், 21-ம் தேதியை பணி நாளாகவும் அறிவித்து உத்தரவிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks