ஓய்வு பெற்ற பிறகும் PF பணத்திற்கு வட்டி கிடைக்கும்! EPFO அறிமுகப்படுத்தும் புதிய தவணை முறை!

ஓய்வு பெற்ற பிறகும் PF பணத்திற்கு வட்டி கிடைக்கும்! EPFO அறிமுகப்படுத்தும் புதிய தவணை முறை!
News Image

இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்களுக்கும் EPFO அமைப்பு இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கும் முறையிலேயே பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO-இன் மத்திய அறங்காவலர் குழு கூட்டம்  நடைபெற்றது. இதில் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை சந்தாரர்கள் எடுத்து பயன்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டன. அதில் இரண்டு முக்கிய மாற்றங்க்ள் கொண்டு வருவதாக முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஃப் கணக்குகளில் இருக்கும் பணத்தை நாம் நம் அவசர தேவைக்கு எடுத்து பயன்படுத்த அனுமதி உண்டு. அவ்வாறு எடுக்கும் போது மொத்தமுள்ள தொகையில் 25% பணத்தை விடுத்து மீதமுள்ள 75% பணத்தை தான் நாம் கிளைம் செய்ய முடியும். உதாரணமாக பிஎஃப் கணக்கில் 1 லட்சம் ரூபாய் இருந்தால் 75,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும், 25,000 ரூபாய் கட்டாயம் கணக்கில் பராமரிக்கப்பட வேண்டும்.

இந்த விதிமுறை இனி மாறுகிறது, பிஎஃப் சந்தாதாரர்கள் பராமரிக்க வேண்டிய கட்டாய குறைந்தபட்ச இருப்பு தொகையை 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் ஊழியர்கள் தங்களுக்கு தேவை ஏற்படும்போது, தாங்கள் சேமித்த தொகையில் 90% பணத்தை எடுக்க முடியும். அதாவது 1 லட்சம் ரூபாய் இருந்தால் 90,000 ரூபாய் எடுக்க முடியும்.

அடுத்ததாக ஒரு ஊழியர் பணி ஓய்வு பெற்ற பிறகு தங்கள் மொத்த பிஎஃப் சேமிப்பையும் ஒரேடியாக எடுக்காமல், குறிப்பிட்ட இடைவெளிகளில் தவணைகளாக பெறும் வகையில் Systematic Withdrawal Plan - SWP அறிமுகப்படுத்த மத்திய அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது ஒரே அடியாக பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துவிடாமல் தவணை முறையில் மாதம் தோறும், காலாண்டு தோறும் அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை என பிரித்து பிரித்து எடுத்து கொள்ளலாம்.

தற்போது பிஎஃப் உறுப்பினர்கள் 58 வயதில் ஓய்வு பெறும்போது தங்கள் மொத்த பிஎஃப் இருப்பில் 100 சதவீதத்தையும் எடுக்க முடியும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதியான சேவை கொண்ட உறுப்பினர்கள், ஊழியர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தனித்தனியாக மாதாந்திர ஓய்வூதியமும் பெறலாம். ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையோ இபிஎஃப் அமைப்பிற்குள்ளேயே வைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் பணம் பெறும் வசதி வர உள்ளது. அதாவது மீதமுள்ள தொகைக்கு நிலவும் இபிஎஃப் வட்டி விகிதம் தொடர்ந்து கிடைக்கும்.

உதாரணமாக பிஎஃப் கணக்கில் 20 லட்சம் ரூபாய் இருக்கிறது என வைத்து கொள்வோம். பணிஓய்வு பெற்ற உடனே இதனை முழுமையாக எடுக்காமல் 2 லட்சம் எடுத்துவிட்டு மீதமுள்ள 18 லட்சத்தை விட்டுவிடலாம் இது தொடர்ந்து வட்டி ஈட்டி தரும். எனவே பணி ஓய்வு பெற்றாலும் நம் பிஎஃப் பணம் வட்டி வருமானம் ஈட்டி தந்து கொண்டே இருக்கும்.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு, சுமார் இரண்டு மாதங்களுக்குள் இவை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks