Periyar Library: புத்தக கொள்முதல் முறைகேடு..! அறிவுவுலகமே அதிர்ந்துபோன சம்பவம் - அரசுக்கு எழுத்தாளர்கள் கோரிக்கை

Periyar Library: புத்தக கொள்முதல் முறைகேடு..! அறிவுவுலகமே அதிர்ந்துபோன சம்பவம் - அரசுக்கு எழுத்தாளர்கள் கோரிக்கை
News Image

TN Govt Periyar Library: தேர்வுக்குழுவினரால் உறுதி செய்யப்பட்ட புத்தகங்கள் தான் கொள்முதல் செய்யப்பட்டனவா? என மறுவுறுதி செய்ய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் கூட்டு கடிதம்:

கோவை பெரியார் நூலகத்திற்கு போலி பதிப்பகங்கள் வாயிலாக தரமற்ற புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தவெக மற்றும் திமுக இடையே அரசியல் மோதலையும் தீவிரப்படுத்தியுள்ளது. இருதரப்பில் இருந்தும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு தரப்பில் சிறப்பு குழுவும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 100-க்கும் அதிகமான எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சேர்ந்து கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அரசாணையும், வல்லுநர் குழுவும்..!

அதில், “அரசு நூலகங்களுக்கான நூல்கள் மற்றும் மின்நூல்கள் கொள்முதல் செய்வதில் குளறுபடிகளோ முறைகேடுகளோ இருக்கக்கூடாது என்று  "வெளிப்படைத் தன்மையான நூல்கள் கொள்முதல் கொள்கை 2024" வெளியிடப்பட்டது. அப்போதிருந்து செயல்முறையிலிருக்கிற இந்தக் கொள்கைக்குட்பட்டே கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட சிறப்பு நூலகங்களுக்கும் புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு மாவட்டங்களின் மையநூலகங்களுக்கும் நூல்கள் மற்றும் மின்நூல்கள் கொள்முதல் செய்வதற்கான அரசாணை 2025 நவம்பர் 05 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.  இந்த அரசாணையின்படி, புனைவு மற்றும் பொதுநூல்களைப் பரிந்துரை செய்வதற்காக எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கல்வியாளர்கள், வாசகர்கள் உள்ளிட்ட 137 பேர் கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அறிவுலகமே அதிர்ந்துபோன தகவல்..!

இந்தக்குழுவினரால் பரிந்துரைக்கப்படும் ஆயிரக்கணக்கான நூல்களிலிருந்து கொள்முதலுக்கான பட்டியலை இறுதிப்படுத்துகிறது,13 பேர் கொண்ட தேர்வுக்குழு. தேர்வுக்குழு இறுதிப்படுத்தும் பட்டியலிலுள்ள நூல்களைக் கொள்முதல் செய்வதற்கு அவற்றினை வெளியிட்டுள்ள பதிப்பகத்தாருடன் பேசி விலையை நிர்ணயிக்கிறது 5 பேர்கொண்ட நூல்விலை பேச்சுவார்த்தைக்குழு. இம்மூன்றுக் குழுக்களின் பரிந்துரைகளையும் கூராய்ந்து ஒப்புதல் வழங்குகிறது 5 பேர் கொண்ட உயராய்வுக்குழு.

இதையும் படியுங்கள்: Spcl Bus Train: சென்னை திரும்பும் மக்களே..! சிறப்பு பேருந்துகள், ரயில்கள் - இன்றும், நாளையும், எங்கிருந்து எத்தனை இயக்கம்?

இவ்வளவு சீரான பரிசீலனைகளின் நிறைவிலேயே நூல்கள் கொள்முதல் செய்யப்படுவதாக நாம் நம்பியிருந்த நிலையில், எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் 2026 அக்டோபர் 17 அன்றும், ஓவியர் சுந்தரன் முருகேசன் 2026 அக்டோபர் 24 அன்றும் முகநூலில் எழுதிய பதிவுகளும், எழுத்தாளர் பெருமாள் முருகன் இணைய இதழொன்றில் 2026 நவம்பர் 6 அன்று எழுதிய கட்டுரையும் கோவை பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒருபகுதி போலியானவை என்கிற அறிவுலகமே தகவலை அதிர்ந்துபோகிற வெளிக்கொணர்ந்துள்ளன.

விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை:

நூலகத்துறையில் நடைபெற்றுள்ள இந்த முறைகேட்டை வழக்கமான நிதிசார் கையாடல் என்பதாக குறுக்கிவிடாமல் தமிழ்ச்சமூகத்தின் அறிவுச்செயல்பாட்டை முடக்கும் தேசவிரோதச் செயலாக கருதி தண்டிக்க வேண்டும். அதனிமித்தம் இந்த முறைகேட்டை விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள போலியான நூல்களை கோவை பெரியார் அறிவுலகத்திற்குப் பரிந்துரை செய்தவர்கள், தேர்வு செய்தவர்கள், தொகை விடுவித்தவர்கள் பற்றிய விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவதுடன் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசடி செயல்படுத்தப்பட்ட காலக்கட்டம் பற்றிய உண்மைத் தகவலை வெளியிட வேண்டும்.

தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை

போலியான நூல்களை வெளியிட்டு அறிவுலகத்திற்கும் அரசுக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ள அகல் விளக்கு, பீனிக்ஸ் மற்றும் இதேபோன்று வேறு பதிப்பகங்கள் இருப்பின் அவற்றின் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசிடமிருந்து மோசடியாகப் பெற்றுள்ள தொகை உரிய வகையில் திரும்பப்பெற வேண்டும்

இந்தப் பதிப்பகங்களின் போலிநூல்கள் அனைத்தும் கண்டறியப் பட்டு நூலகங்களிலிருந்து அகற்றுவதுடன் அவற்றை மேற்கொண்டு எங்கும் விற்றுவிடாத வகையில் பறிமுதல் செய்யவேண்டும்

மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து நூலகங்களையும் குறிப்பிட்ட காலவரம்புக்குள் ஆய்வு செய்து அறிக்கை தரும் வகையில் நடுநிலையான வல்லுனர் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்

நூலகத்துறைக்குள் வருங்காலத்தில் எவ்வகையான முறைகேடும் நடைபெறாவண்ணம் தடுப்பதற்குத் தேவையான திருத்தங்களுடன் "வெளிப்படைத்தன்மையான நூல்கள் கொள்முதல் கொள்கை 2024" *வலுப்படுத்தப்பட வேண்டும்.

நூல் பரிந்துரைக்குழுவினர் தாங்கள் பரிந்துரைத்த பட்டியலிலிருந்தே நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளனவா என்பதை மறுவுறுதி செய்துகொள்ள ஏதுவாக இறுதிப்படுத்தப்பட்ட பட்டியல் அவர்களுக்கு அனுப்பப்படவேண்டும்” என நூற்றுக்கும் அதிகமான எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சார்பில் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks