மானாமதுரை அருகே பயங்கரம்! இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை – நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

மானாமதுரை அருகே இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் இருந்த நண்பரும் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை அருகே உள்ள வேலூர் முருகபாஞ்சான் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். (23) இவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று கிராமத்திற்குள் விக்னேஷும் அவரது நண்பர் முனீஸ்வரனும் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

விக்னேஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த முனீஸ்வரன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதற்கிடையே, உயிரிழந்த விக்னேஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொலைக்கான காரணம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: Read Full Article