வெங்காயம், தக்காளி இல்லாமல் சமையலே இல்லை. அதாவது சாம்பார், கூட்டு பொரியல் மற்றும் பிரியாணி என அனைத்திற்கு தேவையானது இந்த இரண்டுமே. காய்கறிகள் கம்மியாக வாங்கி சென்றாலும் பை நிறைய வெங்காயம், தக்காளி வாங்கி செல்வது வழக்கம். இதை விலை உயர்ந்தால் இல்லத்தரசிகளின் பாடு தீண்டாட்டம் தான். இந்நிலையில் தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் காய்றிகள் மற்றும் வெங்காயம், தக்காளி விலை நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம்.

வெங்காயம், தக்காளி விலை

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இன்றைய (12-11-2026) காய்கறி விலை என்ன என்பதை பார்ப்போம். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 55 முதல் 65 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 75 முதல் 88 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 33 முதல் 39 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 46 முதல் 55 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 33 முதல் 39 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 42 முதல் 49 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 40 முதல் 47 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 45 முதல் 53 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

காய்கறிகள் விலை என்ன.?

முருங்கைக்காய் ஒரு கிலோ 77 முதல் 91 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 முதல் 47 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 70 முதல் 83 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 41 முதல் 48 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 31 முதல் 36 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 முதல் 59 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 முதல் 53 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 33 முதல் 39 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 51 முதல் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உச்சத்தில் இஞ்சி, பூண்டு

பீன்ஸ் ஒரு கிலோ 62 முதல் 73 ரூபாய்க்கும், பூண்டு ஒரு கிலோ 163 முதல் 192 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 153 முதல் 181 ரூபாய்க்கும், பச்சை பட்டாணி 69 முதல் 82 ரூபாய்க்கும், கோவைக்காய் ஒரு கிலோ 39 முதல் 46 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 109 முதல் 129 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 32 முதல் 38 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 26 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 33 முதல் 39 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ ரூ. 48 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 முதல் 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Source: Read Full Article