Anbil Mahesh Bail Plea: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்தை நாடிய அன்பில் மகேஷ்

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர உரிமம் பெற்று தருவதாக கூறி லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. நேற்று இந்த மனுவை தாக்கல் செய்தபோது, வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என அன்பில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.வில்சன் கோரிக்கை விடுத்திருந்தார். அப்போது மனுவுக்கான எண்ணிடும் நடைமுறைகளை இன்றைக்குள் முடித்துவிட்டால் நாளை விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதி வி. லட்சுமிநாராயணன் தெரிவித்தார். அதன்படி ஜாமின் கோரிய மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

”எனக்கு உடம்பு சரியில்லைங்க” - அன்பில் மகேஷ்

அந்த மனுவில், ”தனக்குத் தீவிர கணைய அழற்சி பாதிப்பு உள்ளது. தொடர் மருத்துவ சிகிச்சை மற்றும் பிரத்யேக உணவு முறை தேவைப்படுகிறது. இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமின் வழங்க வேண்டும்” என அன்பில் மகேஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த லஞ்சம் பெற்ற வழக்கில் பி.டி.அரசகுமார், முத்துக்குமாரை தொடர்ந்து தலைமறைவாக இருந்த கார் ஓட்டுநர் சரவணனும் சரணடைந்து விட்டதால் அன்பிலுக்கு இருந்த நெருக்கடி நீங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்த வழக்கில் அன்பில் மகேஷ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தெரிவித்து இருந்ததை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இதையும் படியுங்கள்: TN Govt: 17 கொலைகள் உண்மைதான்..! ஆளுநருக்கு பறந்த ரிப்போர்ட் - எதிர்க்கட்சிகளுக்கு விஜய் அரசு பதிலடி

அன்பிலுக்கு இன்று ஜாமின் கிடைக்குமா?

அன்பில் மகேஷின் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்றாலும், அதற்கு பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறை சார்பில் கூடுதல் அவகாசம் கோரப்படலாம். அதனால் அவருக்கு இன்றே ஜாமின் கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே கூறப்படுகிறது. பதில் மனு தாக்கல் செய்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே நீதிமன்றம், எந்தவொரு இடைக்கால உத்தரவையும் கூட பிறப்பிக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இதனிடையே, தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை, வரும் நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜாமினை நிராகரித்த சிறப்பு நீதிமன்றம்:

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர உரிமம் பெற்று தருவாதக் கூறி 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த அக்டோபர் 26ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் ஜாமீன் கோரி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் மனு அளித்தார். விசாரணையின் முடிவில் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அன்பில் மகேஷ் மீதான புகார்களுக்கு முகாந்திரம் உள்ளதன் காரணமாகவே ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக விளக்கமளிக்கத்தது. இதனிடையே, அவருக்கான நீதிமன்ற காவல் வரும் நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article