Murasu Cyclone: உருவானது முரசு புயல்..! சென்னையை ஒட்டியபடி வால் பகுதி? வடமாவட்டங்களில் கனமழை பொளக்குமா?

Murasu Cyclone: உருவானது முரசு புயல்..! சென்னையை ஒட்டியபடி வால் பகுதி? வடமாவட்டங்களில் கனமழை பொளக்குமா?
News Image

Murasu Cyclone TN Weather: முரசு புயலின் வால்பகுதி தமிழ்நாட்டை ஒட்டி இருப்பதால், வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வங்கக் கடலில் உருவானது ”முரசு” புயல்

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை, முரசு புயலாக வலுப்பெற்றது என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று, 01 நவம்பர், 2026, இந்திய நேரப்படி காலை 0830 மணியளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், அட்சரேகை 11.8°N மற்றும் தீர்க்கரேகை 85.9°E-க்கு அருகில், சென்னைக்கு (தமிழ்நாடு) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 630 கி.மீ., விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தெற்கு-தென்கிழக்கே 710 கி.மீ., நெல்லூருக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 710 கி.மீ., மச்சிலிப்பட்டினத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 710 கி.மீ. மற்றும் ஒங்கோலுக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 750 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.

நவ.3ல் கரையை கடக்கும் புயல்

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 6 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதிகளில் புயலாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் நண்பகலிலேயே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது புயலாக உருவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இது நாளை மேற்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதிகளில் கடுமையான புயலாக வலுப்பெறுவதோடு, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 3 ஆம் தேதி காலைக்குள் நெல்லூர் மற்றும் நர்சபூர் இடையே மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்துடனும், சில சமயங்களில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் திடீர் காற்று வீச்சுடனும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?

புயலின் மையப்பகுதி பெரும்பாலும், ஆந்திராவை ஒட்டியே உள்ளது. அதேநேரம், வால்பகுதி ஓரளவிற்கு அடுத்தடுத்த சில மணி நேரங்களில் தமிழகத்தின் வடமாவட்டங்களை நோக்கி நகர்ந்தால், சென்னை,காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்கள் கனமழை  பெற வாய்ப்புள்ளது. ஆனால், இது புயலின் நகர்வை சார்ந்தே இறுதி செய்யப்படும். தற்போதைய சூழலில் இன்று மாலை 4 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks