டெல்லி மற்றும் வட மாநிலங்களில் மழைக்காலம் நிறைவடைந்து குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், கடும் காற்று மாசுபாடு நிலவிவருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதும், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாவதும் வாடிக்கையாக உள்ளது.

வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு

குளிர்கால காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக BS-6 தர நிலையை எட்டாத பிறமாநில வாகனங்களுக்கு டெல்லிக்குள் நுழையத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் லட்சக்கணக்கான வெளிமாநில வாகனங்கள் டெல்லிக்குள் நுழைவது தடுக்கப்படுமென கூறப்படும் நிலையில், ஏஐ மற்றும் தானியங்கி கேமராக்களின் உதவியுடன் எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெறுகிறது. இந்நிலையில் டெல்லியில் ஏற்கனவே மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டுமானப்பணிகளுக்கு செக் வைத்த அரசு

மாசுபாடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் நவம்பர் 1-ந்தேதி முதல் ஜனவரி 31-ந்தேதி வரை வெளிப்புற கட்டுமானம், இடிப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனை உள்ளிட்டவற்றிற்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 50% அரசு ஊழியர்கள் மட்டுமே அலுவலகங்களுக்கு வருகைத்தர வேண்டுமெனவும், மீதமுள்ளவர்கள் work from home முறையில் பணியாற்றவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article