இந்திய கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் தொடரில் மட்டும் ஆடி வந்தார்.

தோனி ஓய்வு:

கடந்த இரு சீசன்களாக தோனி ஆடாவிட்டாலும் அவர் அடுத்த சீசனில் ஆடுவார் என்றே நம்பிக்கையுடன் ரசிகர்கள் இருந்தனர். ஆனால், நேற்று அளிக்கப்பட்ட வீரர்கள் தக்கவைப்பு பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாததும், தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

45 வயதான தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது மொத்த ரசிகர்களுக்கும் வேதனையை உண்டாக்கியுள்ளது. தோனியையும், சிஎஸ்கே-வையும் பிரித்துப் பார்ப்பது என்பது இயலாத ஒன்றாகும். சென்னை அணிக்காக 5 கோப்பைகளை வென்று தந்த தோனி தனி ஆளாக பல போட்டிகளையும் வென்று கொடுத்துள்ளார்.

ஃபேர்வெல் போட்டி கூட இல்லையே:

விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற பல ஜாம்பவான் வீரர்களை இந்திய அணிக்காகவும் உருவாக்கிய தோனி சென்னை அணியிலும் மிகவும் பலவீனமான அணியை வைத்துக்கொண்டும் கோப்பையை வென்ற சாதனைக்குரியவர். உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனான தோனிக்கு ஒரு ஃபேர்வெல் போட்டி இல்லாமலே போய்விட்டதே என்று தோனி ரசிகர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

தோனி இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டியைக் காண்பதற்கு ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிவார்களா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. சென்னை அணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தோனியும் சென்னை அணியையும் பிரிக்க முடியாது என்றே கருதப்படுகிறது. அவர் சென்னை அணியின் ஆலோசகராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதனைகள்:

தோனி இதுவரை ஐபிஎல் வரலாற்றில் சென்னைக்காக மட்டும் 256 போட்டிகளில் ஆடி 222 இன்னிங்சில் பேட் செய்து 5 ஆயிரத்து 141 ரன்கள் எடுத்துள்ளார். 91 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். அதிகபட்சமாக 84 ரன்கள் எடுத்துள்ளார். 353 பவுண்டரிகளும், 245 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். 24 அரைசதங்களும் விளாசியுள்ளார். சிஎஸ்கே தடை விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டுகள் அவர் புனே அணிக்காக ஆடினார். சிஎஸ்கே அணிக்கு 2 சாம்பியன்ஸ் லீக் டிராபியும் வென்று கொடுத்துள்ளார்.

ஐபிஎல் பாேட்டியில் 2008ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக அறிமுகமான தோனி கடைசியாக குஜராத் அணிக்கு எதிராக 2025ம் ஆண்டு ஆடினார். அந்த போட்டியில் தோனி களமிறங்கவே இல்லை. அந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. தோனி சென்னை அணியின் ஒரே முகமாக இருந்தார். அவருடன் தொடக்க காலத்தில் ஆடி சென்னை அணியின் முகமாக இருந்த சுரேஷ் ரெய்னா முன்பே ஓய்வு பெற்ற நிலையில், அஸ்வின், ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு போன்றோரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்றனர். ஃப்ளெமிங் முதல் ஆயுஷ்மாத்ரே வரை அவர்களுடன் இணைந்து தோனி விளையாடி அசத்தியுள்ளார்.

Source: Read Full Article