IPL Auction 2027: ஐபிஎல் 2027ம் ஆண்டு தொடருக்கான ஏலம் வாயிலாக 66 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஐபிஎல் 2027 - வீரர்களுக்கான ஏலம்

வரும் 2027ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் வகையிலான மினி ஏலம் வரும் டிசம்பர் 16ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவாவில் உள்ள ஐடிசி க்ராண்ட் ஓட்டலின் இந்த ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணியளவில் இந்த ஏலம் தொடங்க உள்ளது. இந்த முழு நிகழ்வும் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட்ஸ்டார் செயலியிலும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

ரூ.1000 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களை தக்கவைப்பது மற்றும் விடுவிப்பது தொடர்பான முடிவுகளை எடுக்க, அணி நிர்வாகங்களுக்கு டிசம்பர் 17ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 10 அணிகளும் சேர்த்து 55 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 184 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மொத்த மதிப்பு ஆயிரத்து 2 கோடியே 5 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக குஜராத் அணி 22 வீரர்களை தக்கவைக்க, பெங்களூரு அணியில் அதிகப்படியான வெளிநாட்டு வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், 89 வீரர்கள் விடுவிக்கப்பட்டு, 10 அணிகளிலும் சேர்த்து தற்போது 66 காலியிடங்கள் உள்ளன. இதில் 25 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கானதாகும்.

இதையும் படியுங்கள்: Mini Cooper EV: நாட்டின் ஒரே க்ளோபல் மின்சார ஹேட்ச்பேக்..! 391KM ரேஞ்ச் காருக்கான முன்பதிவு தொடக்கம் - முழு விவரம்

ரூ.297.95 கோடிக்கு ஏலம்

வீரர்கள் விடுவிப்பு மற்றும் ட்ரேட் நடவடிக்கைகளை தொடர்ந்து தற்போதைய சூழலில் 10 அணிகளிடமும் சேர்த்து 297 கோடியே 95 லட்சம் மீதமுள்ளது. 18 வீரர்களை தக்கவைத்துக்கொண்டதோடு, லக்னோ அணி அதிகபட்ச கையிருப்போடு ஏலத்தில் பங்கேற்க உள்ளது. குஜராத் அணி மிகவும் குறைந்த தொகையோடு இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ.47.45 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ.41.65 கோடி

சன்ரைசர் ஐதராபாத் - ரூ.40.15 கோடி

டெல்லி கேபிடல்ஸ் - ரூ.39.50 கோடி

மும்பை இந்தியன்ஸ் - ரூ.32.60 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.28.05 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ.27.05 கோடி

பஞ்சாப் கிங்ஸ் - ரூ.18.60 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி - ரூ.14.15 கோடி

குஜராத் டைட்டன்ஸ் - ரூ.8.75 கோடி

எந்த அணியில் காலியிடங்கள் அதிகம்?

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 3 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 7 பேர் தேவை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 3 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 8 பேர் தேவை

சன்ரைசர் ஐதராபாத் - 3 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 7 பேர் தேவை

டெல்லி கேபிடல்ஸ் - 4 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 9 பேர் தேவை

மும்பை இந்தியன்ஸ் - 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 9 பேர் தேவை

சென்னை சூப்பர் கிங்ஸ் - 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 6 பேர் தேவை

ராஜஸ்தான் ராயல்ஸ் - 3 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 6 பேர் தேவை

பஞ்சாப் கிங்ஸ் - 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 6 பேர் தேவை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி - ஒரு வெளிநாட்டு வீரர் உட்பட 5 பேர் தேவை

குஜராத் டைட்டன்ஸ் - 2 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 3 பேர் தேவை

Source: Read Full Article