தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுக, பாஜக என எல்லோரும் இணைந்து சதி செய்து வருகிறார்கள். எங்கள் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள். ஆனால், தவெக எம்.எல்.ஏக்கள் யாரும் விலைபோக மாட்டார்கள் என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

தவெக ஆட்சியை கவிழ்க சதி | அமைச்சர் புகார் https://t.co/LRXU10pMDY | #CTRNirmalKumar #TVK #CMJosephVijay #DMK #AIADMK #BJP #HorseTrading #Tnnews #NewsUpdate #abpnadu https://t.co/snJkK2dlyW

— ABP Nadu (@abpnadu) November 4, 2026

பாஜகவுடன் இணைந்துகொண்டு, திமுக இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதிமுகவும் இந்த முயற்சிக்கும் துணை நிற்பதாகவும் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், மக்களின் ஆதரவுடன் முதல்வர் விஜயின் ஆட்சி நீடித்து நிலைத்திருக்கும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் கூறியிருக்கிறார்.

ஆட்சியை கவிழ்க்க ஏற்கனவே நடந்த முயற்சி

தவெக ஆட்சி அமைந்த காலக்கட்டத்தில் அந்த ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ததாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு, இந்த வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், மீண்டும் தவெக ஆட்சியை கவிழ்கும் நோக்கில், நவம்பரில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில், பாஜகவும் இவர்களுக்கு துணை நின்று வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்

Source: Read Full Article