Manickam Tagore On TVK MLA: உதயநிதி பேச்சை தவெக எம்.எல்.ஏ., விவகாரத்துடன் ஒப்பிடக்கூடாது என, மாணிக்கம் தாக்கூர் சாடியுள்ளார்.

”தவெக எம்.எல்.ஏ., பாவம்”

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாக்கூரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ”அருள் விக்னேஷின் பேட்டியை ஊடகங்களில் பார்த்தேன். ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்றால், எப்படிப்பட்ட வாட்ஸ்-அப் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நமக்கு தெரிகிறது. யாராவது ஒருவர் எதையாவது கிளப்பிவிட்டால், அதற்கு அனைவரும் கருத்துகளை சொல்லி, ஒருவரை குற்றவாளியாக்கி, ஊடகங்களிலேயே மொத்த விசாரணையும் நடந்ததுவிடுகிறது.

”தவறு இருந்தால் விசாரணை அவசியம்”

எம்.எல்.ஏ., பாவம், அவர் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகி உள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த முதல் தலைமுறை சட்டமன்ற உறுப்பினர். எனவே அவரை வைத்து இப்படி ஊடக விசாரணைகள் நடைபெறுவது எந்தவிதத்திலும் நியாயமற்றது. வாட்ஸ்-அப் செய்தியாக வந்ததை ஊடகங்கள் செய்தியாக்கி, அதை எம்.எல்.ஏவிடம் கேட்க, அவர் அதை மறுத்துள்ளார். இத்தகைய விவகாரங்களில் தவறு நடந்து இருந்தால் விசாரணை நடத்த வேண்டியது அவசியம்.

”உதயநிதி பேச்சு அயோக்கியத்தனம்”

உதயநிதி பொதுவெளியில் பேசிய பேச்சுக்கு புகார் எதுவும் எழாதபோதே கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு மாவட்ட ஆட்சியரே பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஏன் அரசு மவுனம் காக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “உதயநிதி பேசிய பேச்சை இன்னொருமுறை கேட்டுப்பாருங்கள். அவரது பேச்சு அயோக்கியத்தனமானது, அருவெறுக்கத்தக்க பேச்சு. அதைபோன்று தவெக எம்.எல்.ஏ., பேசினாரா? என்பதற்கு ஏதேனும் சாட்சியம் உள்ளதா? இரண்டு சம்பவங்களையும் ஒப்பிடுவது என்பது மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளது. உதயநிதி சுமார் 2 ஆயிரம் பேர் முன்னிலையில் அதிகார மமதையில் பெண்கள் யாரும் காது கொடுத்து கேட்க முடியாத வகையில் பேசியிருந்தார்.

இதையும் படியுங்கள்: Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யாவை ரூ.18 கோடிக்கு விற்ற மும்பை..! எந்த அணிக்கு? யாருக்கு பதிலாக தெரியுமா?

அதையும், ஆதாரங்கள் இல்லாத ஒரு விஷயத்தில் பாவம் நான் அப்படி பேசவில்லை என மறுக்கும் தவெக எம்.எல்.ஏ., விவகாரத்தையும் ஒப்பிட்டு பேசுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது, தவறான உதாரணம். ஒருவேளை சட்டமன்ற உறுப்பினர் இப்படி பொதுவெளியில் பேசியிருந்தால் நாம் இப்படி விவாதிக்க வேண்டிய அவசியம் இருந்து இருக்காது. ஆனால், அவர் தான் இல்லை என மறுக்கிறாரே. எனவே இரண்டு சம்பவங்களையும் ஒப்பிடக்கூடாது. அதேபோல் இந்த விவகாரத்தில் உண்மை இருந்தால் அரசு விசாரணை நடத்தி தெளிவுபடுத்த வேண்டும்” என மாணிக்கம் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.

Source: Read Full Article