மதுரை புத்தக கண்காட்சி 13 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதிவரை குளீருட்டப்பட்ட அறையில் நடைபெறுகிறது. 200 பதிப்பாளர்களின் புத்தகங்கள் இடம்பெறவுள்ளது.

புத்தகத் திருவிழா-2026

மதுரை தெற்கு மாசி வீதி, எழுத்தாணிக்கார தெரு பகுதியில் மதுரை புத்தகத் திருவிழா-2026 நிகழ்வை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் மதுரை வாசிக்கிறது என்ற மாபெரும் வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மேயர் நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

மதுரை வாசிக்கிறது என்ற முழக்கங்களோடு புத்தகதிருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்..," இக்கட்டான சூழலில் புத்தக திருவிழா தொடங்குகிறது. புத்தகம் அறிவை ஞானத்தை விரிவு செய்யும் மகத்தாக கருவி, மதுரை புத்தக திருவிழாவை அனைவரும் சிறப்பிக்க வேண்டும், அனைத்து மாணவ மாணவியர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்றார். பின்னர் கல்லூரி, பள்ளி மாணவ மாணவியர்கள், பேராசியர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்று கைகளில் புத்தகங்களை ஏந்தியவாறு மதுரை வாசிக்கிறது என்ற முழக்கங்களோடு புத்தகதிருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன்

மதுரை புத்தகத்திருவிழா 13-ஆம் தேதி தொடங்கி வரும் 23 ஆம் தேதிவரை நடைபெறுவுள்ளது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை வாசிக்கிறது. என்ற நிகழ்வை வரலாற்று சிறப்பு மிக்க எழுத்தாணிக்கார தெருவில் இந்த நிகழ்ச்சியை தொடங்குகிறோம். மதுரை புத்தகத்திருவிழாவை சிறப்பிக்க ஒவ்வொரு குடும்பமும் பங்கேற்க வேண்டும், 200க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் இடம்பெறவுள்ளது., மதுரை புத்தகத்திருவிழா வரலாற்று சிறப்புமிக்கதாக விளங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். புத்தகத்திருவிழாவின் போது மாணவர்களை வெயிலில் நிறுத்தகூடாது என்பது போன்ற கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பிரச்னைகள் சரிசெய்யப்படும். மதுரையில் மட்டும் தான் குளீருட்டப்பட்ட வசதியில் புத்தகத்திருவிழா நடைபெறுகிறது. பள்ளி கல்லூரி மாணவர்களை புத்தகத்திருவிழாவில் வரவேற்பதற்கான அனைத்துவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறோம் என்றார்.

Source: Read Full Article