கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தமட்டில் இந்தியா -பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே நேரடி போட்டி நடைபெறாமல் உள்ள நிலையில், ஐசிசி தொடரில் மட்டுமே நேரடியாக பங்கேற்று ஆடி வருகின்றனர்.

இந்தியா - பாகிஸ்தான் மோதல்:

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பைத் தொடரில் நேரடியாக பங்கேற்று ஆடும் போட்டிகளை காண்பதற்கு ரசிகர்கள் பட்டாளம் குவிவது வழக்கம். அடுத்தாண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 10ம் தேதி மோதுகின்றன.

டிக்கெட்டிற்கு விண்ணப்பித்த 84 லட்சம் ரசிகர்கள்:

இந்த போட்டி தென்னாப்பிரிக்கா நாட்டில் உள்ள ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானத்தின் ரசிகர்கள் பார்ப்பதற்கான மொத்த இருக்கையே 34 ஆயிரம் மட்டுமே ஆகும். ஆனால், அடுத்தாண்டு நடைபெற உள்ள இந்த போட்டியைக் காண்பதற்காக 84 லட்சம் ரசிகர்கள் தற்போதே டிக்கெட் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

இதே மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியைக் காண்பதற்காகவும் ரூபாய் 80 லட்சம் வரை ரசிகர்கள் டிக்கெட்டுகள் கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த தொடரில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றனர். அடுத்தாண்டு அக்டோபர் 2ம் தேதி முதல் நவம்பர் 21ம் தேதி வரை உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ளது. தற்போது வரை 120 மில்லியன் டிக்கெட்டுகள் கோரி ரசிகர்கள் தரப்பில் இருந்து விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.

கோலி, ரோகித்தின் கடைசி உலகக்கோப்பை:

அடுத்தாண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி சுப்மன்கில் தலைமையில் களமிறங்க உள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும், ஜாம்பவான் வீரர்களுமான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் இதுவே கடைசி உலகக்கோப்பை என்பதால் இந்த தொடர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ரோகித் சர்மா, விராட் கோலி மட்டுமின்றி ஜடேஜாவிற்கும் இதுவே கடைசி உலகக்கோப்பையாக அமைகிறது. அணியில் புவனேஷ்வர் மற்றும் ஷமி இடம்பிடித்தால் அவர்களுக்கும் இதுவே கடைசி உலகக்கோப்பையாக அமையும் என்றே கருதப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா நாட்டில் 23 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த உலகக்கோப்பையை நேரில் காண்பதற்காக அந்த நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி பிறநாட்டு ரசிகர்களும் மிகப்பெரிய அளவில் நேரில் காண்பதற்கு குவிவார்கள் என்பதால் தற்போது முதலே அந்த நாட்டு உணவகங்கள், விடுதிகளில் முன்பதிவு தற்போது முதலே தீவிரமாக நடந்து வருகிறது.

Source: Read Full Article