உலகில் இன்று 3 வடிவ கிரிக்கடெட்டிலும் ஒரு முதன்மையான அணியாக திகழ்வது இந்தியா. குறிப்பாக, வெள்ளை நிற பந்து போட்டிகளான டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் இந்தியா அசத்தி வருகிறது.

அடுத்தாண்டு உலகக்கோப்பை:

ஐபிஎல் தொடர்களுக்கு பிறகு இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரன்மழையைப் பொழிந்து வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவில் நடக்கும் வெள்ளை நிற பந்து போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகளவிலே காணப்படுகிறது. அதற்கு கடந்த கால இந்திய போட்டிகளில் ரன்மழையை எடுத்துப் பார்த்தாலே புரியும்.

ஆனால், இது ஆரோக்கியமற்ற போக்கு என்றே பலரும் எச்சரித்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு மைதானங்கள் இதுபோன்று ரன்மழையைப் பொழியும் அளவிற்கு வடிவமைக்கப்படவில்லை என்பதே அதற்கு காரணம். அடுத்தாண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது.

தடுமாறும் இந்திய பேட்டிங்:

தென்னாப்பிரிக்கா மைதானத்தைப் பொறுத்தமட்டில் மைதானம் சிறியதாக இருந்தாலும் பேட்டிங்கிற்கு எந்தளவு ஒத்துழைக்குமோ? அதே அளவு பந்துவீச்சிற்கும் மிகப்பெரிய அளவில் ஒத்துழைக்கும். இதனால் பந்துவீச்சாளர்களுக்கு நிகராக பேட்ஸ்மேன்களுக்கும் மிகப்பெரிய அளவில் சவால் இருக்கும் என்று கருதப்படுகிறது.

நியூசிலாந்து மண்ணில் தற்போது நடந்து வரும் ஒருநாள் தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர் என்றே கூற வேண்டும். ஆக்லாந்து மற்றும் வெலிங்டனில் நடந்த அடுத்தடுத்த 2 போட்டிகளில் இந்திய பந்துவீச்சு மிக அசத்தலாக அமைந்தது. அன்சுல் கம்போஜ், குர்னூர் ப்ரார், அர்ஷ்தீப்சிங், அக்யூப் நபி என்ற இளம் பந்துவீச்சாளர்கள் மிரட்டலாக பந்துவீசினர்.

சொற்ப ரன்களில் அவுட்:

இந்தியா கடந்த இரு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தாலும் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. முதல் போட்டியில் விராட் கோலி, சுப்மன்கில் தவிர எஞ்சிய பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் படேல் தடுமாறினார்கள். கேப்டன் சுப்மன்கில் ஓரளவு சிறப்பாக ஆடினார்.

நேற்று நடந்த போட்டியில் 135 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய 113 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தபோது டிஆர்எஸ் முறைப்படி வெற்றி பெற்றது. சுப்மன்கில் டக் அவுட்டானார். விராட் கோலியும் 7 ரன்களுக்கு அவுட்டானார். அக்ஷர் படேல், நமன்தீர் ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

சவாலாக இருக்கும் பந்துவீச்சு:

இந்திய அணியைப் பொறுத்தமட்டில் தென்னாப்பிரிக்க போன்ற மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் எதிரணி பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டால் மட்டுமே வெற்றியைப் பெற இயலும். கடந்த 2003ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரே அதற்கு சிறந்த உதாரணம்.

தற்போதைய நியூசிலாந்து தொடர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஒரு சிறப்பான பயிற்சியாக அமைந்துள்ளது. இந்த கடினமான பிட்சும்க்ஷ, சவாலான நிலையும் அடுத்தாண்டு உலகக்கோப்பைக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி தயாராக வேண்டும் என்பதற்கு உதாரணம் ஆகும்.

வலுவாகுமா?

இதனால், அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி இன்னும் தனது பேட்டிங்கை வலுப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். அனுபவ வீரர்களான கோலி, ரோகித் தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்த வேண்டியது மட்டுமின்றி சுப்மன்கில், ஸ்ரேயாஸ் ஐயர், நமன்தீர், அக்ஷர் படேல் ஆகியோரும் தங்களது பேட்டிங் பலத்தை மெருகேற்ற வேண்டியது அவசியம் ஆகும்.

Source: Read Full Article