தங்கம் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இந்நிலையில் தங்கம் விலை அக்டோபர் மாதத்தில் சரசரவென குறைந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் நவம்பர் தொடக்கத்தில் சரசரவென ஏகிறியது. தீபாவளி நெருங்குவதால் தங்கம் விலை மேலும் உயரும் என கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென சரிவை சந்தித்தது. ஆகையால் தங்கம் தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

நேற்று தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.20 உயர்ந்து ரூ. 13,160க்கும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. ரூ.1,05,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தீபாவளியான இன்று தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்க்கலாம்.

தங்கம் நிலவரம் என்ன?

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 08) நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.1,05,280ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ. 13,160ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 14,356ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ. 1,14,848ஆக விற்பனையாகிறது. இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாததால் தீபாவளி மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் வருவதால் நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றம் இல்லை

வெள்ளி விலை கடந்த மூன்று நாட்களாக ஒரே விலையில் நீடிக்கிறது. ஒரு கிராம் விலை ரூ.205க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,05,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article