இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இரு அணிகளும் மோதிய டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இந்திய அணி - நியூசிலாந்து அணி மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது.

முதல் ஒருநாள்:

இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை ஆக்லாந்தில் நடக்கிறது. அந்த நாட்டில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது. டி20 தொடரை இழந்த நியூசிலாந்து அணி இந்த ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் களமிறங்குகின்றனர். மேலும், கடைசி 2 டி20 போட்டியிலும் வெற்றி பெற்றதால் அவர்கள் ஆர்வத்துடனும் களமிறங்குவார்கள்.

இந்த தொடருக்கான இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்களை இந்திய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. முதல் 3 போட்டிக்கு சுப்மன்கில்லும், கடைசி 2 போட்டிக்கு ஸ்ரேயாஸ் ஐயரும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

விராட் - ரோகித்:

இந்திய அணியைப் பொறுத்தமட்டில் இந்த தொடருக்கு மிகப்பெரிய பலமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா காணப்படுகிறார்கள். அனுபவமிகுந்த இவர்கள் இருவரும் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். கேப்டன் சுப்மன்கில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் நிலையில், இந்த தொடரிலும் அவர் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும்.

பேட்டிங் பலம்:

இந்திய அணியைப் பொறுத்தமட்டில் பேட்டிங்கில் கேப்டன் சுப்மன்கில், துணை கேப்டன் ஸ்ரேயாஸ், ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், நமன்தீர் உள்ளனர். ஆல்ரவுண்டர்களாக அக்ஷர் படேல் முக்கிய பங்கு வகிக்க உள்ளார்.

சொந்த மண்ணில் களமிறங்கும் நியூசிலாந்து அணிக்கு டாம் லாதம், கான்வே, மிட்செல், ப்ரேஸ்வெல், யங், டிம் செஃபெர்ட், பிலிப்ஸ், ரவீந்திரா என அவர்களது பேட்டிங் ஆர்டரும் வலுவாக உள்ளது.

படுமோசமான பவுலிங்:

டி20 தொடரைப் பொறுத்தமட்டில் பந்துவீச்சு இரு அணியிலும் மோசமாகவே இருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வலுவாக அமையவில்லை. அடுத்தாண்டு ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் அமைய உள்ள நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு தரத்திற்கு இந்த தொடர் நல்ல சவாலாக இருக்கும்.

முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், குர்னூர் ப்ரார், அன்சுல் கம்போஜ் பந்துவீச்சாளர்களாக இந்திய அணியில் உள்ளனர். இவர்களை அனுபவமிகுந்த சிராஜ் வழிநடத்த உள்ளார். வெளிநாடுகளில் ஆடிய அனுபவம் மற்றவர்களுக்கு பெரியளவில் இல்லாத நிலையில், அவர்கள் இந்த தொடரில் சிறப்பாக ஆடினால் உலகக்கோப்பைத் தொடரில் இடம்பிடிக்கவும் வாய்ப்புகள் பிரகாசம் ஆகும். குல்தீப்யாதவ், அக்ஷர் படேலுடன் இணைந்து நமன்தீர் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளராக அசத்துவதால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும்.

நியூசிலாந்து அசத்துமா?

சொந்த மண்ணில் ஆடும் நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் கேப்டன் சான்ட்னர் பந்துவீச்சில் மிகப்பெரிய பலம் ஆகும். சுழற்பந்துவீச்சாளரான அவர் சவால் அளிப்பார் என்று கருதப்படுகிறது. ஹென்றி நிகோலஸ், ஜேக்கப் டஃபி, மேட் ஹென்றி, ஜேமிசன் என்று நியூசிலாந்து பந்துவீச்சு பட்டாளமும் வலுவாக உள்ளது.

5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் பேட்டிங்கைக் காட்டிலும் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தும் அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசம் ஆகும். நாளை தொடங்கும் இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த போட்டியை சோனி லைவ் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம். இந்த போட்டி நாளை காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Source: Read Full Article