IND vs NZ: வாவ்... இப்படி ஒரு பவுலிங்கை பார்த்து எவ்ளோ நாளாச்சு? நெருக்கடியில் வென்று கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள்!

IND vs NZ: வாவ்... இப்படி ஒரு பவுலிங்கை பார்த்து எவ்ளோ நாளாச்சு? நெருக்கடியில் வென்று கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள்!
News Image

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு இந்திய அணியின் பலவீனமாக பந்துவீச்சு இருந்தது. ஆனால், வெளிநாட்டு மண்ணில் நடைபெற்ற இந்த தொடரில் இந்தியாவின் பலமாக பந்துவீச்சுதான் அமைந்தது.

பந்துவீச்சு பலம்:

மவுண்ட் மாங்கனேயில் நேற்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் 210 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. இந்த மைதானத்தில் கடந்த போட்டியில் 334 ரன்களை விளாசிய நியூசிலாந்து இந்த போட்டியிலும் எளிதாக வென்று விடும் என்றே அனைவரும் கருதினர்.

முகமது சிராஜ், அர்ஷ்தீப் மட்டுமே அனுபவசாலிகளாக இருந்த நிலையில், மற்ற வீரர்கள் அனுபவம் குறைந்தவர்களாக இருந்தனர். இருப்பினும் இந்த நெருக்கடியான சூழலிலும் தங்கள் திறமை மூலமாக ஆட்டத்தையே மாற்றினர்.

புதிய வீரர்கள் அசத்தல்:

அணியில் புதியதாக வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ள அக்யூப் நபி, யஷ் தாக்கூர் மிக மிக கட்டுக்கோப்பாக பந்துவீசினர். முகமது சிராஜ் டிம் செஃபெர்ட்டை அவுட்டாக்க நிக் கெல்லி, வில் யங் இருவரையும் அர்ஷ்தீப்சிங் அவுட்டாக்கினார்.

அதிரடி பேட்ஸ்மேன் ஃபின் ஆலனை 1 ரன்னில் சிராஜ் அவுட்டாக்க, இந்திய அணிக்கு நெருக்கடி தந்த ஃபாக்ஸ்கிராஃப்டை 31 ரன்னில் யஷ் தாக்கூர் போல்டாக்கினார். ஆபத்தான கேப்டன் சான்ட்னரை 24 ரன்னில் நமன் தீர் அவுட்டாக்க, ப்ரேஸ்வெல்லை நபி வெளியேற்றினார். டெயிலண்டர்களான டிக்னர், டஃபியை அக்ஷர் படேல் அவுட்டாக்க இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கட்டுக்கோப்பான பந்துவீச்சு:

மிக மிக பரபரப்பான இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் பெரியளவு இந்திய அணிக்காக செலுத்தாத நிலையில், பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி போட்டி மட்டுமின்றி தொடரையும் வென்று தந்துள்ளனர். சிராஜ் 10 ஓவர்களில் 50 ரன்கள் கொடுக்க, அர்ஷ்தீப் சிங் 10 ஓவர்களில் 30 ரன்களும், நபி 10 ஓவர்களில் 37 ரன்களும், யஷ் தாக்கூர் 10 ஓவர்களில் 38 ரன்களும் என கட்டுக்கோப்பாக வீசினர்.

கட்டுக்கோப்பு, கட்டுப்பாடான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் இந்த பந்துவீச்சு படை உலகக்கோப்பைக்குச் செல்வதற்கு முன்பு மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. அணிக்குள் பும்ரா வந்தால் இந்த பந்துவீச்சு இன்னும் மிகவும் வலுவாக அமையும். மேலும், குர்னூர் ப்ரார், கம்போஜ் ஆகியோரையும் இந்திய அணி தயார்படுத்தி வைத்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks