ICC Worldcup Schedule: சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் சார்பில் 2035ம் ஆண்டு வரை திட்டமிடப்பட்டுள்ள போட்டிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐசிசி போட்டி அட்டவணை:

அடுத்த 9 ஆண்டுகளுக்கு உலக நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 2031ம் ஆண்டு மீண்டும் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்திய கிரிக்கெட் சம்மேளனத்திற்கு 2029ம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் ட்ராபியை போட்டியை நடத்துவதற்கான உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் 11 போட்டிகளுக்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

5வது முறையாக இந்தியாவில் உலகக் கோப்பை:

ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுவது இது ஐந்தாவது முறையாகும். கடந்த 1983ம் ஆண்டு முதல்முறையாக உலகக் கோப்பையை வென்ற பிறகு, 1987ம் ஆண்டு முதல்முறையாக இந்தியாவில் இந்த போட்டி நடத்தப்பட்டது. அதன் பிறகு 1996ம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் சேர்ந்து இந்தியா இந்த போட்டிகளை நடத்தியது. 2011ம் ஆண்டு இலங்கை மற்றும் வங்கதேசத்துடன் இணைந்து நடத்தியதோடு, தனது இரண்டாவது உலகக் கோப்பையையும் வென்றது. 2023ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்தி இறுதிப்போட்டி வரை முன்னேறினாலும், சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. தொடர்ந்து ஐந்தாவது முறையாக வரும் 2031ம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வழிநடத்த உள்ளது. இந்த முறை வங்கதேசத்துடன் இணைந்து இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இது 2031ம் ஆண்டின் அக்டோபர் 9ம் தேதி தொடங்கி நவம்பர் 23ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: TN Weather News: அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை, காஞ்சிக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை

சாம்பியன்ஸ் ட்ராபி:

முன்னதாக நடப்பு சாம்பியனான இந்தியாவிற்கு வரும் 2029ம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியை நடத்துவதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டின் அக்டோபர் 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரையில் இந்த தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2035ம் ஆண்டு வரையிலான ஐசிசி போட்டி அட்டவணை

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவிருக்கும் 2028 டி20 உலகக் கோப்பை தொடங்கி, 2035 கிரிக்கெட் உலகக் கோப்பை வரையிலான ஆடவர் போட்டி கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

2028: டி20 உலகக் கோப்பை – ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து (அக்டோபர் 12 – நவம்பர் 12)

2029: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இங்கிலாந்து (ஜூன் 8-12)

2029: சாம்பியன்ஸ் டிராபி – இந்தியா (அக்டோபர் 9-28)

2030: டி20 உலகக் கோப்பை – இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து (ஜூலை 4 – ஆகஸ்ட் 4)

2031: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இங்கிலாந்து (ஜூன் 12-16)

2031: கிரிக்கெட் உலகக் கோப்பை – இந்தியா மற்றும் வங்கதேசம் (அக்டோபர் 9 – நவம்பர் 23)

2032: டி20 உலகக் கோப்பை – நடத்தும் நாடு பின்னர் அறிவிக்கப்படும் (அக்டோபர் 14 – நவம்பர் 14)

2033: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – நடத்தும் நாடு பின்னர் அறிவிக்கப்படும் (ஜூன் 9-13)

2033: சாம்பியன்ஸ் டிராபி – புரவலர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் (அக்டோபர் 2-23)

2034: டி20 உலகக் கோப்பை – நடத்தும் நாடு பின்னர் அறிவிக்கப்படும் (ஜூலை 6 – ஆகஸ்ட் 6)

2035: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – நடத்தும் நாடு பின்னர் அறிவிக்கப்படும் (ஜூன் 7-11)

2035: கிரிக்கெட் உலகக் கோப்பை – நடத்தும் நாடு பின்னர் அறிவிக்கப்படும் (அக்டோபர் 2 – நவம்பர் 18)

Source: Read Full Article