நியூசிலாந்து இந்தியா அணிக்கு எதிரான 5-வது டி20 போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் அதிரடியாக இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அதாவது அக்‌ஷர் பட்டேல் மற்றும் மாயங்க் யாதவ் பதிலாக வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் களமிறக்கப்பட்டனர். அதேபோல் நியூசிலாந்தில் மேத்யூ ஃபிஷர் பதிலாக நேதன் ஸ்மித் களமிறங்கப்பட்டார்.

இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி

முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தொடங்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி இணைந்து அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 43 பந்தில் 93 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 61 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய நமன் தீர் (33), நிதிஷ்குமார் ரெட்டி (22) ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது.

ஆடம் மில்னே 4 விக்கெட்

நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய ஆடம் மில்னே 4 விக்கெட்டுகளையும், நேதன் ஸ்மித், பிளேர் டிக்னர் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டிம் சீஃபர்ட் - ஃபின் ஆலன் ஆகியோர் களமிறங்கினர். அதிரடி வீரர் ஃபின் ஆலன்(2) ரன்களில் வெளியேறினார்.

நியூசிலாந்து அபார வெற்றி

பின்னர் டிம் சீஃபர்ட் - டேரில் மிட்செல் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தனர். இருவரும் இணைந்து 42 பந்துகளில் 73 ரன்கள் குவித்தனர். டேரில் மிட்செல் (29) ரன்களில் வெளியேறினர். இதனையடுத்து டிம் சீஃபர்ட் - கிளென் பிலிப்ஸ் இணைந்து அதிரடியாக விளையாடினர். இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் டிம் சீஃபர்ட் சதத்தை தவறவிட்டார். இறுதியில் 18 ஓவர்களில் 195 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. கிளென் பிலிப்ஸ்(65) ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். 3-2 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

Source: Read Full Article