IND Vs NZ: தொடக்கத்தில் அதிர்ச்சி.. சரிவிலிருந்து மீட்ட இஷான் - ஸ்ரேயாஸ் ஜோடி! இந்திய அணி 191 ரன்கள் குவிப்பு!
IND Vs NZ: தொடக்கத்தில் அதிர்ச்சி.. சரிவிலிருந்து மீட்ட இஷான் - ஸ்ரேயாஸ் ஜோடி! இந்திய அணி 191 ரன்கள் குவிப்பு!
News Image
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 4 டி20 போட்டிகளில் இந்திய அணி மூன்றிலும், நியூசிலாந்து ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் இரண்டு மாற்றம்
அணியை மீட்ட இஷான் கிஷன் - ஸ்ரேயாஸ் ஐயர்
பின்னர் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி இணைந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 43 பந்தில் 93 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 32 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் 23 பந்துகளில் 50 ரன்களில் வெளியேறினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. நமன் தீர்(33), நிதிஷ் குமார் ரெட்டி (22) ரன்கள் எடுத்திருந்தனர்.
நியூசிலாந்து அணிக்கு 192 இலக்கு
நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய ஆடம் மில்னே 4 விக்கெட்டுகளையும், நேதன் ஸ்மித், பிளேர் டிக்னர் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து விளையாட உள்ளது.
Source: Read Full Article
கருத்துரையிடுக
Please Select Embedded Mode To Show The Comment System.*
புதியது பழையவை
Post Ads 1
Post Ads 2
Whoever You Are, Whatever You Do, Wherever You May Be
When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks