தங்கம் விலை கடந்த இரண்டு மாதங்களாக தாறுமாறாக குறைந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் சவரன் ரூ.5,120 குறைந்துள்ளது. இதன் மூலம் தங்கம் மீண்டும் ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் செல்லுமா என்ற எதிர்பாத்திருந்த பொதுமக்களுக்கு இன்று குஷியாக செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை விரிவாக பார்க்கலாம்.

நேற்றைய விலை

நேற்று தங்கம் விலை சரசரவென குறைந்தது. அதாவது தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.75 குறைந்து ரூ.12,540க்கும், ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.100,320க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதையும் படிங்க: Gold Rate Today: ஒரு லட்சத்திற்கு கீழ் சென்றதா தங்கம் விலை? போட்டி போட்டுக்கொண்டு குறையும் தங்கம், வெள்ளி!

ஒரு லட்சத்துக்கு கீழ் சென்ற தங்கம்

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 17) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.99,760ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.12,470ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.13,604ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ.1,08,832ஆக விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கம் சரிவை சந்தித்து வருவதால் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

வெள்ளி நிலவரம்

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. அதாவது ஒரு கிராம் விலை ரூ.190க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article