திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!

திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
News Image

போதையின் உச்சியில் நடுரோட்டில் அட்ராசிட்டி செய்த பெண்களிடம் எந்த ஊருமா நீ? என்று கேட்டவரிடம், ஊரா.. பாரின்.. துபாயி என்ற பொன்னான வசனத்திற்கு சொந்தமான அந்த பெண்ணையும், போக்குவரத்தையே ப்ளாக் செய்து லேடீசே ராணுவ படை என்ற அவரது தோழியையும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டோம்...

இளைஞருக்கு வலை:

என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்ற டயலாக்கிற்கு ஏற்ப அவர்கள் செய்த மற்றொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை ஐயப்பாக்கத்தில் தங்கி பணிபுரிந்து வந்த இளைஞர் ஸ்ரீராம். 23 வயதான அவருக்கு செல்போன் மூலம் இளம்பெண் ஒருவர் பழக்கமாகியுள்ளார். நீண்ட நாள் பழக்கத்திற்கு பிறகு அந்த பெண்ணைச் சந்திப்பதற்காக ஸ்ரீராம் சென்னையில் உள்ள பிரபலமான வணிக வளாகத்திற்குச் சென்றுள்ளார்.

ஆசையாக சென்றவருக்கு ஆப்பு ரெடியாக இருக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கமாட்டார். அங்கு சென்று பார்த்தால் போதையில் அட்ராசிட்டி செய்த அந்த இரு பெண்களும் இருந்துள்ளனர்.  பின்னர், அங்கிருந்து ஸ்ரீராம் கிளம்பும்போது அவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அதில் ஒரு பெண் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

போக்சோ வழக்கு:

இந்த சம்பவம் தொடர்பாக, திருமங்கலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அந்த சிறுமிகளுக்கு 17 வயதுதான் ஆகியிருந்ததால் ஸ்ரீராம் மீது உடனே போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஸ்ரீராமை கைது செய்து உள்ளே தள்ள நினைத்தபோதுதான் நெட்டிசன்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற அந்த வீடியோவும் வைரலானது.

இந்த சம்பவம் ஆகஸ்ட் மாதமே அரங்கேற தற்போது, நெய்வேலியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் தனக்கு சுரேஷ் கிருஷ்ணா என்பவர் திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை விசாரிக்க அடுத்தடுத்து அதிர்ச்சி உண்மைகள் வெளியாகியுள்ளது.

திடுக்கிடும் பின்னணி:

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேட்ரிமோனி மூலமாக வரன் தேடிக் கொண்டிருக்கும்போது சுரேஷ் கிருஷ்ணா என்பவர் அறிமுகமாகியுள்ளார். சும்மா அம்சமாக இருந்த சுரேஷ் கிருஷ்ணாவின் மேட்ரிமோனியல் ப்ரொஃபலைப் பார்த்த பெண்ணுக்கும், அவரது வீட்டிற்கும் பிடித்துப் போக திருமணத்திற்கும் தயாராகியுள்ளனர்.

இதையடுத்து, சுரேஷ் கிருஷ்ணாவை நேரில் பார்க்க ஆசைப்பட்டுச் சென்றபோதுதான் மொத்த குடும்பத்திற்கும் ஷாக் காத்திருந்தது. மேட்ரிமோனியல் ப்ரொஃபைலில் இருந்ததற்கும் நேரில் இருந்த சுரேஷ் கிருஷ்ணாவிற்கும் துளியளவு சம்பந்தம் இல்லாமல் இருந்துள்ளது. இதுமட்டுமின்றி அவரது வயது 40 என்பதையும் அவர் பெண்ணிடம் மறைத்துள்ளார்.

சதி வலை:

இதனால், அதிர்ச்சி அடைந்த பெண் குடும்பத்தினர் எப்பா.. சாமி.. உன் சங்காத்தாமே வேண்டாம்னு கிளம்ப, சுரேஷ் கிருஷ்ணாவோ அந்த பெண்ணுக்கு விடாமல் தொல்லை கொடுத்துள்ளார். துளியும் அவரை அந்த பெண் கண்டுகொள்ளாத நிலையில், அந்த பெண்ணின் குடும்பத்தை பழிவாங்க சதித்திட்டம் தீட்டி அவர் குறிவைத்த ஆள்தான், அந்த பெண்ணின் தம்பி ஸ்ரீராம்.

ஸ்ரீராமை ஹனி ட்ராப்பில் சிக்க வைத்து அந்த பெண்ணின் குடும்பத்தின் மானத்தை வாங்க சுரேஷ் கிருஷ்ணா போட்ட ஸ்கெட்ச் தான் அந்த போக்சோ வழக்கு. இதற்காக அவர் ப்ரோக்கர் மூலம் செட் செய்ததுதான் இன்ஸ்டா பிரபலம் துபாயி ஃபேமஸ் சிறுமிகள்.

லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர்:

17 வயதான அவர்கள் ஸ்ரீராமை இந்த சதியில் சிக்க வைக்க, திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமியும், காவலர் வசந்தராஜாவும் உடந்தையாக இருந்துள்ளனர். ஸ்ரீராமின் அக்கா கொடுத்த புகாரை விசாரித்தபோதுதான் மொத்த உண்மையும் வெளிச்சத்தற்கு வந்துள்ளது. ஒரு குடும்பத்தின் மானத்தை வாங்கி நாசமாக்குவதற்காக விஜயலட்சுமியும், வசந்தராஜாவும் 5.50 லட்சம் ரூபாய் லஞ்சமும் வாங்கியுள்ளனர்.

இந்த உண்மைகளை அறிந்து டென்ஷனான கமிஷனர் அமல்ராஜ் விஜயலட்சுமி, வசந்தராஜா இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சுரேஷ் கிருஷ்ணாவையும் அலேக்கா தூக்கி சிறையில் அடைத்துள்ளனர். அந்த சிறுமிகளும் விரைவில் சிக்குவார்கள் என்று கருதப்படுகிறது. காசுக்கு ஆசைப்பட்டு இளைஞனை சிக்க வைக்க நினைத்த காக்கிகள் இருவரும் கம்பிக்குள் விரைவில் தள்ளப்படுவார்கள் என்ற சேதியும் வெளியாகி வருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks