தங்கம் என்பது ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. கடந்த சில ஆண்டுகளாக தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டி வந்த நிலையில் நகைப்பிரியர்கள் மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தங்கம் விலை அக்டோபரை தொடர்ந்து நவம்பர் மாதத்திலும் தங்கம் விலை சரசரவென குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

நேற்று தங்கம் விலை குறைந்தது. அதாவது தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.195 குறைந்து ரூ. 13,015க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ரூ.1,04,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? இது தான் தங்கம் வாங்க சரியான நேரமா என்பதை பார்க்கலாம்.

தங்கம் விலை சரிவு

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 12) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,02,520ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ. 12,815ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 13,980ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ. 1,11,840ஆக விற்பனையாகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் ரூ.3,520 குறைந்ததை அடுத்து நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

இதையும் படிங்க: Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சியா? ஈவினிங் டைம்லயும் தங்கம் விலை குறைந்ததா?

வெள்ளி விலை

கடந்த இரண்டு நாட்களாக வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. அதாவது ஒரு கிராம் விலை ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article