முல்லைப் பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குநா் கிரிதரன் தலைமையில், துணைக் கண்காணிப்பு குழுவினா் இன்று ஆய்வு செய்கின்றனா்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை நூற்றாண்டுகளைக் கடந்தும் வலுவாகவே உள்ளது. முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பாசன வசதி மற்றும் குடிநீர் வசதி பெற்று வருகின்றன. தமிழ்நாட்டுக்குச் சொந்தமான, கேரளா எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. ஆனால் கேரளா அரசுகள் காலந்தோறும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது.

முல்லைப்பெரியாறு அணை இடிந்துவிடும், முல்லைப் பெரியாறு அணையால் கேரளா அழிந்துவிடும், முல்லைபெரியாற்றின் குறுக்கே கேரளாவே புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து அவ்வப்போது ஆய்வு செய்ய மத்திய நீர்வளத்துறை சார்பில் இரண்டு குழுக்கள் அமைத்து ஆய்வு செய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் அனில்ஜெயின் தலைமையில், மேற்பாா்வை குழுவினா் உள்ளனா். இந்தக் குழுவுக்கு உதவியாக, முல்லைப் பெரியாறு அணைக்கு துணைக் குழு அமைக்கப்பட்டது.

அணைகள் பாதுகாப்பு ஆணைய தென்மண்டல இயக்குநா் கிரிதரன் தலைமையிலான இந்த துணைக் குழுவில் தமிழகம் சாா்பில், பெரியாறு வைகை வடிநில கோட்டம் மதுரை கண்காணிப்பு பொறியாளா் சாம் இா்வின், பெரியாறு அணை சிறப்பு கோட்டம் கம்பம் செயற்பொறியாளா் செல்வம், கேரளம் சாா்பாக, எா்ணாகுளம் மத்திய வட்ட நீா்ப்பாசன பிரிவு கண்காணிப்பு பொறியாளா் சுரேஷ் பாபு, கட்டப்பனை, நீா்ப்பாசன துணைப் பிரிவு செயற்பொறியாளா் லெவின்ஸ் பாபு உள்ளனா்.

இந்தத் துணைக் குழுவினா் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி அணையில் ஆய்வு செய்தனா். இந்த நிலையில், துணைக் குழுவினா் இன்று முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு செய்கின்றனர். அங்கு பிரதான அணை, சிற்றணை, மண் அணை அணை நீா்வரத்து, நீா்க்கசிவு, மதகுகளின் இயக்கம், கேலரி பகுதிகளை ஆய்வு செய்யவும், அன்று மாலை குமுளியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.

Source: Read Full Article