சர்வதேச பொருளாதார மற்றும் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் தங்கம் விலை அக்டோபர் மாதத்தில் சரசரவென குறைந்து வந்த நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. இதனால் தங்க நகைகள் வாங்கலாமா அல்லது இன்னும் குறையுமா பொருத்திருந்து வாங்கலாமா என நகைப்பிரியர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

நேற்று தங்கம் விலை குறைந்தது. அதாவது தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.45 குறைந்து ரூ. 13,210க்கும், ஒரு சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ. ரூ.1,05,680க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்க்கலாம்.

தங்கம் விலை உயர்வு

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 11) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ரூ.1,04,120ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.195 குறைந்து ரூ. 13,015ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 14,198ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ. 1,13,584ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் திடீர் மாற்றம்

வெள்ளி விலை கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வந்த நிலையில் இன்று கிராமிற்கு 5 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் விலை ரூ.200க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article